யாரை ஆதரிப்பது?: மனைவியா காங்கிரசா?

புதுடில்லி: உங்களுக்கு யார் முக்கியம். கட்சியா மனைவியா. இந்தக் குழப்பம் இந்தி நடிகர் சத்ருகன் சின்காவுக்கு இப்போது ஏற்பட்டுள்ளது.

பா.ஜ.,வில் இருந்த சத்ருகன், சமீபத்தில் காங்.,கில் சேர்ந்தார். இவரது மனைவி பூனம் சின்கா திடீரென சமாஜ்வாதி கட்சியில் சேர்ந்து, மத்திய அமைச்சர் ராஜ்நாத்தை எதிர்த்து லக்னோ தொகுதியில் போட்டியிடுகிறார்.


இதே தொகுதியில் காங்., சார்பில் பிரமோத் கிருஷ்ணம் என்பவர் நிற்கிறார். இப்போது சத்ருகன் முன் உள்ள கேள்வி, அவர் சார்ந்துள்ள காங்., வேட்பாளரை ஆதரிக்க வேண்டுமா அல்லது மனைவியை ஆதரிக்க வேண்டுமா என்பதுதான். பீகாரில் பாட்னா சாகிப் தொகுதியில் சத்ருகனை காங்., நிறுத்தி உள்ளது. அம்மாநிலத்தில் பகுஜன் கட்சியுடன் சமாஜ்வாதி கட்சி கூட்டணி சேர்ந்தது. லக்னோ சமாஜ்வாதிக்கு ஒதுக்கப்பட்டது. இதையடுத்து சமாஜ்வாதி தலைவர் அகிலேசை சந்தித்த சத்ருகன், மனைவிக்கு சமாஜ்வாதி கட்சியில் சீட் தருமாறு கேட்டார். அது போலவே சீட் தரப்பட்டது.

காங்., அதிருப்தி



இது காங்கிரசார் மத்தியில் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது. தனது கட்சியான காங்.,கிற்கு தான் சத்ருகன் ஆதரவு தர வேண்டும். மனைவியை மறந்து விட வேண்டும் என்று அக்கட்சியினர் கேட்கின்றனர்.


பிரமோத் கிருஷ்ணம் கூறும்போது, ‛‛கட்சியை தியாகம் செய்துவிட்டு, மனைவியைத் தான் சத்ருகன் ஆதரிக்கிறார்'' என்று குற்றம்சாட்டி உள்ளார்.‛‛மனைவியை ஆதரிப்பது தவறு இல்லை. குடும்ப தலைவர் மற்றும் கணவர் என்ற முறையில் மனைவியை ஆதரித்து தான் ஆக வேண்டும். ஆனால் நான் எந்த காங்., வேட்பாளரையும் எதிர்த்து பிரசாரம் செய்ய மாட்டேன்'' என்று பதில் அளித்துள்ளார் சத்ருகன். காங்கிரசார் சமாதானம் அடையவில்லை. மனைவியின் வேட்பு மனு தாக்கு ஊர்வலத்தில் சத்ருகன் கலந்துகொள்ளக் கூடாது என கட்சி தலைவர் ராகுலிடம் கேட்கப் போகிறோம் என்று காங்கிரசார் கூறுகின்றனர்.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)