ஆனந்தம் தருமா ஆனந்த்?

நாட்டின், பால் உற்பத்தி தலைநகராக விளங்கும், குஜராத்தின், ஆனந்த் தொகுதியில், வெற்றிக் கொடி நாட்டுவதற்கு, காங்கிரஸ் தீவிரமாக உள்ளது. இங்கு, முன்னாள் மத்திய அமைச்சர், பாரத் சிங் சோலங்கியை, வேட்பாளராக நிறுத்தியுள்ளது.குஜராத்தில் உள்ள, 26 தொகுதி கள், 23ல் தேர்தலை சந்திக்க உள்ளன. கடந்த தேர்தலில், 26 தொகுதி களையும், பா.ஜ., வென்றது. இந்தத் தேர்தலில், மாநிலத்தில் அதிக தொகுதிகளில் வெல்வதற்கு, காங்கிரஸ் வியூகம் வகுத்துள்ளது.

குஜராத்தில், காங்கிரசின் கோட்டை என்று சொல்லப்படும், ஆனந்த் தொகுதியைக் கைப்பற்ற, அந்தக் கட்சி தீவிரமாக உள்ளது. நாட்டின் பால் உற்பத்தியின் தலைநகராக, ஆனந்த் விளங்குகிறது. பால் கூட்டுறவு
அமைப்புகள் மூலம், வெள்ளை புரட்சி நடந்தது, இந்தத் தொகுதியில் தான். உலகப் புகழ்பெற்ற, 'அமுல்' நிறுவனம் அமைந்துள்ளது.

ஐந்து முறை

ஆனந்த் தொகுதியில், காங்கிரஸ், 12 முறை வென்று உள்ளது. 1989, 1999 மற்றும் 2014ல் மட்டும், பா.ஜ., வென்றுள்ளது. தற்போதைய தேர்தலில், காங்கிரஸ் சார்பில், முன்னாள் மத்திய அமைச்சர், பாரத் சிங் சோலங்கி நிறுத்தப்பட்டுள்ளார்.

இவர் இந்தத் தொகுதியில், 2004 மற்றும் 2009ல் வென்றார்; கடந்த தேர்தலில், பா.ஜ.வின், திலிப் படேலிடம் தோல்வி யடைந்தார். இவர் தாத்தா, ஈஸ்வர் சாவ்டா, 1980 - 1998 காலக்கட்டத்தில், ஐந்து முறை வென்றார்.

தற்போது, பிரபல தொழிலதிபர், மிதேஷ் படேலை, பா.ஜ.,வேட்பாளராக களமிறங்கியுள்ளது. பிரதமர், நரேந்திர மோடியின் சொந்த மாநிலம்; வளர்ச்சிப் பணிகள் போன்றவை, தனக்கு சாதகமாக உள்ளன என, மிதேஷ் படேல் கூறி வருகிறார்.

குற்றச்சாட்டு: பாரத் சிங் சோலங்கி, இரண்டு
முறை, எம்.பி.,யாக இருந்தாலும், தொகுதி மக்களுடன் அதிக நெருக்கமாக இல்லை என்ற குற்றச் சாட்டு உள்ளது.இந்நிலையில், 'ஆனந்த் தொகுதியில், காங்., வெல்லாவிட்டால், மாநிலத்தில், வேறு எந்தத் தொகுதியிலும் வெற்றி பெற முடியாது' என, பாரத் சிங் சோலங்கி பேசியுள்ளார்.

'இவர் ஏன்,இப்படி உணர்ச்சிவசப்பட்டு பேசினார்... ஆனந்தில், அவரை தோற்கடிப்பதற் கான முயற்சியில், பா.ஜ., ஈடுபடுவதற்கு வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்து விட்டாரே' என, காங்கிரஸ் கட்சியினர் புலம்புகின்றனர்.
- நமது நிருபர் -வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)