20 ஆண்டுகள் ஆனாலும் ராகுல் பிரதமராக முடியாது: வருண் சாபம்

புதுடில்லி: பிரதமர் பதவிக்கு பொருத்தமில்லாதவர் ராகுல் என அவரது உறவினரும், மேனகா மகனுமான வருண் கூறினார்.
லோக்சபா தேர்தலில் மேனகா மகனும் பிலிபித் தொகுதி பா.ஜ. வேட்பாளருமான வருண்,39 , டி.வி. சேனல் ஒன்றிற்கு அளித்த பேட்டி,
பொதுத்தேர்தலில் பிரதமராக ராகுல் வருவதற்கு வாய்ப்பில்லை. அந்த பதவிக்கே பொருத்தமில்லாதவர். இதை சொல்வதால் நான் ஜோதிடனல்ல. நிச்சயமாக சொல்கிறேன். இன்னும் 10 முதல் 20 ஆண்டுகள் ஆனாலும் ராகுல் பிரதமராக முடியாது என்றார்.
ராஜிவ் குடும்பத்தைச் சேர்ந்த சோனியா, ராகுல், பிரியங்கா ஆகியோரை விமர்சிப்பதை வருண், தாய், மேனகா ஆகியோர் தவிர்த்து வந்த நிலையில் வருண் பகிரங்கமாக விமர்சித்துள்ளதாக கூறப்படுகிறது.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)