அப்துல்லா குடும்ப ஆதிக்கம் அகலுமா?: ஸ்ரீநகர் தொகுதியில் போட்டியே இல்லை

ஜம்மு - காஷ்மீரின் ஸ்ரீநகர் லோக்சபா தொகுதியை, அப்துல்லா குடும்பத்தினரின் ஆதிக்கத்தில் இருந்து அகற்ற, மற்ற கட்சிகள் உறுதி எடுத்துள்ளன. ஆனால், வேட்பாளர்கள் சரியாக அமையாததால், மீண்டும் அப்துல்லா குடும்பத்திற்கே இந்த தொகுதி கிடைக்கும் என, தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஸ்ரீநகர் லோக்சபா தொகுதிக்கு, இதுவரை, 16 தேர்தல்கள் நடந்துள்ளன. அவற்றில், 10 முறை, தேசிய மாநாட்டு கட்சியே வெற்றி பெற்று உள்ளது. இதில், அப்துல்லா குடும்பத்தினர் மட்டும், ஏழு முறை, எம்.பி.,யாகி உள்ளனர். மாநில முன்னாள் முதல்வர், பரூக் அப்துல்லாவின் தாய், அக்பர் ஜஹான், 1977ம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற்றார். அதன்பின், 1980ல் களம் இறங்கிய அவரது மகன், பரூக் அப்துல்லா, மூன்று முறை வெற்றி பெற்று உள்ளார். பரூக்கின் மகன், ஒமர் அப்துல்லா மூன்று முறை, எம்.பி., ஆகியுள்ளார். இந்த மாநில அரசியல் ஜாம்பவானாக கருதப்படும், பரூக் அப்துல்லா, இந்த முறை ஸ்ரீநகர் தொகுதியில் போட்டியிடுகிறார்.

அவரை எதிர்த்து, மக்கள் ஜனநாயக கட்சி சார்பிலும், பா.ஜ., கூட்டணியில் உள்ள, சஜ்ஜாத் லோனின் மக்கள் மாநாடு கட்சி சார்பிலும், ஷியா பிரிவைச் சேர்ந்த, இரண்டு தொழில்அதிபர்கள் நிறுத்தப்பட்டு உள்ளனர்.அப்துல்லா குடும்ப ஆதிக்கத்தில் இருந்து, ஸ்ரீநகர் தொகுதியை மீட்க வேண்டும் என, பா.ஜ., உள்ளிட்ட கட்சிகள், உறுதி எடுத்து உள்ளன. ஆனால், எதிர் அணியில் நிற்கும் வேட்பாளர்கள், அரசியலுக்கும், மக்களுக்கும் புதியவர்கள் என்பதால், பரூக் அப்துல்லாவுக்கு போட்டியே இல்லாத நிலை ஏற்பட்டு உள்ளது. இங்கு, இன்று ஓட்டுப்பதிவு நடக்கிறது.

ஓட்டு சதவீதம் உயருமா?நாட்டிலேயே, ஜம்மு - காஷ்மீரில் மட்டுமே, தேர்தலில் ஓட்டு போடும் மக்களின் எண்ணிக்கை, ஆண்டு தோறும் குறைந்து வருகிறது. ஸ்ரீநகர் தொகுதியில், பெரும்பாலான தேர்தல்களில் மிக குறைந்த ஓட்டுகளே பதிவாகின்றன.பயங்கரவாதிகள் பிரச்னை, பிரிவினைவாத பிரசாரம், அரசின் மீதான நம்பகத்தன்மை குறைவு போன்ற காரணங்களால், படித்தவர்கள் கூட, ஸ்ரீநகரில் ஓட்டு போட தயங்கும் நிலை உள்ளது.இந்த மனநிலையை மாற்றி, ஓட்டுப்பதிவு சதவீதத்தை உயர்த்த வேண்டும் என, தேர்தல் ஆணையம் முயற்சி எடுத்து உள்ளது.வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)