சாத்தூர் அமமுக வேட்பாளர் வீட்டில் ஐ.டி ரெய்டு

சாத்தூர்:விருதுநகர் மாவட்டம் சாத்துார் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அமுமுக வேட்பாளர் சுப்ரமணியன் வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடந்தது.. ஏற்கனவே சுப்ரமணியன் அலுவலகம் மற்றும் தோட்டத்தில் ரூ.43 லட்சம் பறிமுதல் செய்துள்ள நிலையில் சோதனை நடந்தது.

சாத்தூர் சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் அமமுக சார்பில் சுப்ரமணியன் என்பவர் போட்டியிடுகிறார். அவரது உறவினர் வீட்டில் தேர்தல் பறக்கும் படையினர் இன்று பிற்பகலில் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் ரூ.10 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
இதனை தொடர்ந்து சுப்பிரமணியனின் தோட்டத்தில் ரெய்டு நடத்தப்பட்டது. இதில் பம்பு செட் பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ. 33 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)