ரூ.10 கோடி பரிசு திட்டம்

அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் வேட்பாளர்களுக்கு, 10 கோடி ரூபாய் பரிசு திட்டத்தை, கீழ்பவானி விவசாயிகள் சங்கத்தினர் அறிவித்து உள்ளனர்.கீழ்பவானி விவசாயிகள் சங்கத்தின் சார்பில், திருப்பூர் லோக்சபா தொகுதி வேட்பாளராக, கதிரேசன் என்பவர் களமிறங்கியுள்ளார். இவருக்கு ஆதரவு திரட்டும் வகையில் வெளியிடப்பட்டுள்ள துண்டு பிரசுரம், சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

துண்டு பிரசுரத்தில் கூறப்பட்டுள்ளதாவது: வாக்காளர்களிடையே, அரசியல் கட்சியினர் ஓட்டு கேட்டு வருகின்றனர். 'எங்கள் வீட்டில், ஏழு ஓட்டு; நீங்கள் எவ்வளவு தருவீர்கள்?' என்று, மக்கள் கேட்கின்றனர். 'நான் கொள்ளை அடித்ததும், குவித்ததும், உங்களுக்கு கொடுப்பதற்கு தான்' என்று, வேட்பாளர் கூறுகிறார். இவ்வாறு, திருமங்கலத்தில் போட்ட கோடு, சென்னை, ஆர்.கே.நகரில், ரோடாக மாற்றம் கண்டுள்ளது. மடியை அவிழ்த்த பணம், வாக்காளர்களின் கைகளுக்கு செல்லும் ஆளுமை இருந்தால், வெற்றி உறுதி. மக்களாட்சி மரபு மாறிப் போன தமிழ் சமுதாயத்தை, உலகமே காறி துப்பியது; நாடு நாறிப் போனது; இது வரலாறு.

மன்னர் காலத்தில், மக்களாட்சி வழியில், குடவோலை முறையில், உள்ளாட்சி அமைத்து, நல்லாட்சி கண்டது, தமிழ் இனம்; இதுவும் வரலாறு.கொள்ளையடித்து குவித்தவர்கள், வாக்காளர்களுக்கு வாரி வழங்க வருவர். அடுத்த கொள்ளைக்கு அஸ்திவாரம் போடுவர். துாண்டில் முள்ளில், இரையை குத்தி வந்து கொடுத்து, நடித்து கெஞ்சும் கயவர்கள் இவர்கள். சரிந்த முந்தானையை சரிசெய்ய விரையும், இளம்பெண்ணின் கைபோல, ஜனநாயகம் காக்க, வாக்காளர்களே முன்வாருங்கள்.

'டாஸ்மாக்' மதுக்களும், வெளிநாட்டு தயாரிப்பு மதுக்களும், கள்ளைவிட நல்லவை என நிரூபிக்கும், அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் மற்றும் தலைவர்களுக்கு, 10 கோடி ரூபாய் பரிசாக வழங்கப்படும்.ஈரோடு, பவானிசாகர் அணையில், நீர் நிர்வாகம் நியாயமாக நடத்தப்பட்டு வருகிறது என நிரூபிப்பவர்களுக்கு, 1 கோடி ரூபாய் பரிசு வழங்கப்படும். நீலகிரி, திருப்பூர், ஈரோடு, கரூர் லோக்சபா தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களும், ஓட்டு கேட்டு வரும் தலைவர்களும், இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்த வேண்டும். இவ்வாறு, அதில் கூறப்பட்டு உள்ளது.வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)