சேலம் மாவட்டம், தலைவாசல் ஒன்றியத்துல, வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்யும் வேலை தொடங்கிடுச்சு. அதுல, தி.மு.க., 300, அ.தி.மு.க., 200 என, பட்டுவாடா போகுது. அ.ம.மு.க.,வுலயும், 300 ரூபாய் தர்றாங்க. மணிவிழுந்தான் பஞ்சாயத்துக்கு பணம் தர, 7.50 லட்சம் ரூபாயை, அ.ம.மு.க.,வைச் சேர்ந்த ஒருவர் எடுத்து சென்றுள்ளார்.
தகவலறிந்து, பறக்கும் படைக்கு மூக்கு வேர்க்க, சம்பந்தப்பட்ட நபரை மடக்க முயற்சித்துள்ளனர். 'பரிசு பெட்டகத்தை' வாக்காளர்களிடம் கொண்டு சேர்க்க முடிவு செய்த உறுப்பினர், மொத்த பணத்தையும் லுங்கியில் போட்டு, மடிச்சு கட்டி, 'சிக்கிடாதடா கைப்புள்ள'ன்னு வடிவேல் மாதிரி, மேடு பள்ளங்களில் புகுந்து ஓடியுள்ளார்.
அப்போது, 500 ரூபாய் கட்டான, 50 ஆயிரம் ரூபாய் சாலையில் விழுந்துள்ளது. இருந்தாலும், 7 லட்சத்தை காப்பாற்ற, 50 ஆயிரம் கீழே விழுந்ததை, உறுப்பினர் கண்டு கொள்ளாமல் ஓடி விட்டார். சாலையில் விழுந்த, 50 ஆயிரம் ரூபாய் யார் வசம் உள்ளது என்பது குறித்து தான், மணிவிழுந்தான் வாசிகள் மத்தியில் பேச்சு.
வாசகர் கருத்து