அ.ம.மு.க., தொண்டர்கள் அடாவடி

காஞ்சிபுரம்:காஞ்சிபுரத்தில் நடந்த அ.ம.மு.க., பிரசார கூட்டத்தில், இரு சக்கர வாகனங்களில், அத்துமீறல் செய்த தொண்டர்களை, போலீசார் கண்டித்து அனுப்பினர்.


காஞ்சிபுரம் லோக்சபா தொகுதியில், அ.ம.மு.க., சார்பில் முனுசாமி போட்டியிடுகிறார். இவரை ஆதரித்து, காஞ்சிபுரத்தில் பிரசாரம் நடந்தது. இதில், அக்கட்சியின் துணை பொது செயலர், தினகரன் பங்கேற்றார்.இந்த கூட்டத்திற்காக, அ.ம.மு.க., நிர்வாகிகள், கிராம பகுதிகளில் இருந்து, ஏராளமான வேன் மற்றும் பஸ்கள் மூலம், ஆட்களை அழைத்து வந்தனர். அவர்களுக்கு மதிய உணவு மற்றும் தலைக்கு, 200 ரூபாய் வழங்கப்பட்டது.


கூட்டத்திற்கு, இரு சக்கர வாகனங்களில் வந்த தொண்டர்கள், வாகனத்தின் சைலன்சரை கழற்றியிருந்தனர். இதனால், 'டர்... புர்...' என, வாகனத்தில் கிளம்பிய பயங்கர சத்தம், பொதுமக்களுக்கு இடையூறாக இருந்தது.இதையடுத்து, அத்துமீறல் செய்த தொண்டர்களை, போலீசார் பிடித்தனர். இதனால், காந்தி சாலையில் கூட்டம் கூடியது.போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால், அத்துமீறலில் ஈடுபட்ட தொண்டர்களை கண்டித்து, போலீசார் அனுப்பினர்.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)