அ.தி.மு.க., கூட்டணி கட்சிகள் தனியாக சென்று ஓட்டு கேட்பு

காஞ்சிபுரம்:காஞ்சிபுரத்தில், அ.தி.மு.க.,வுக்கு ஆதரவாக, கூட்டணி கட்சியான, த.மா.கா.,வினர், நகர் பகுதிகளில் நேற்று, தனியாக சென்று ஓட்டு கேட்டனர்.


காஞ்சிபுரம் லோக்சபா தொகுதியில், அ.தி.மு.க, வேட்பாளர், மரகதம் போட்டியிடுகிறார். அவருக்கு ஆதரவாக, கூட்டணி கட்சியான, த.மா.கா.,வினர், காஞ்சிபுரம் நகர் பகுதியில், நேற்று, ஓட்டு சேகரித்தனர்.மாவட்ட தலைவர், மலையூர் புருசோத்தமன் தலைமையில், தொண்டர்கள், மேளதாளங்களுடன் தெரு தெருவாக சென்றனர்.


நான்கு ராஜவீதிகள், ரங்கசாமி குளம், விளக்கடி கோவில் தெரு, தாயார் குளம் தெரு ஆகிய பகுதிகளில், துண்டு பிரசுரம் வழங்கிய அவர்கள், இரட்டை இலைக்கு ஓட்டளிக்கும்படி வலியுறுத்தினர்.இரு தினங்களுக்கு முன், தே.மு.தி.க.,வினர் தனியாக சென்று, அ.தி.மு.க.,வுக்கு ஆதரவாக பிரசாரம் செய்தனர்.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)