தமிழகத்தின் உயிரை மீட்க கமல்ஹாசன் அழைப்பு

திருச்சி:'எங்களுக்கு ஓட்டு போடுங்கள். அதன் மூலம், தமிழகத்தின் உயிரை மீட்டு எடுப்போம்,'' என, மக்கள் நீதி மையம் கட்சி தலைவர்கமல்ஹாசன் பேசினார்.

திருச்சி லோக்சபா தொகுதி வேட்பாளர், ஆனந்தராஜாவை ஆதரித்து, நேற்று திருச்சி மத்திய பஸ் ஸ்டாண்ட் அருகே, கமல்ஹாசன் பேசியதாவது:அரசுப் பள்ளிகளை உலகத் தரத்திற்கு மாற்ற வேண்டும் என, அரசு நினைக்கவில்லை. சாராய வியாபாரத்தை கையில் எடுத்து, கல்வியை தனியார் துறையிடம் கொடுத்து விட்டனர்.


வட மாநிலங்களில் அண்ணாதுரை, காமராஜர், கக்கன் போன்றவர்களின் பெயர்களை காட்ட முடியாது. தமிழகத்தில் காந்தி, பட்டேல், போஸ் போன்ற பெயர்கள் உள்ளன. நாங்கள் சம்பாதிக்க வரவில்லை. இது சம்பாதிக்கும் இடமுமில்லை.சிந்தித்து செயல்படும் நேரம். யாரும் உயிரை கொடுக்க வேண்டாம்; அது உங்களோடு இருக்கட்டும். இப்போது, ஓட்டு மட்டும் போடுங்கள். அதன் மூலம் தமிழகத்தின் உயிரை மீட்டு எடுப்போம்.இவ்வாறு அவர் பேசினார்.


திருச்சி மத்திய பஸ் ஸ்டாண்ட் அருகே, காலை, 8:30 மணிக்கும், ஸ்ரீரங்கத்தில், 10:00 மணிக்கும், கமல் பிரசாரம் செய்வார் என, அறிவிக்கப்பட்டிருந்தது.இதனால், காலை, 8:00 மணியில் இருந்தே போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.'காலை, 8:30 மணிக்கு கூட்டம் சேராது' என கமலிடம் கூறப் பட்டதால், மத்திய பஸ் ஸ்டாண்ட் பகுதியில், 10:00 மணிக்கு மேல் தான் பிரசாரம் செய்வார், என தெரிவிக்கப்பட்டது.இருப்பினும், 9:00 மணியிலிருந்தே, வாகனங்களில் தொண்டர்களும், பெண்களும் அழைத்து வரப்பட்டனர். காலை, 11:00 மணிக்கு கமல் பிரசாரத்தில் ஈடுபட்டார்.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)