தெரிஞ்சாதானே சொல்லுவாரு!

நெல்லை தொகுதி, அ.தி.மு.க., வேட்பாளர் மனோஜ் பாண்டியனை ஆதரித்து, நடிகர் கார்த்திக் பிரசாரம் செய்தார். மேலப்பாளையம் குறிச்சி கார்னரில், அவர் பேசியதாவது:நான் சமீபத்தில், ஒரு கட்சி ஆரம்பித்தேன். தனியா போட்டியிட்டிருக்கலாமே என, நீங்க கேட்கலாம். அரசியலில் சுயநலம் இருக்க கூடாது. நான் மற்றவர்களுக்காக பிரசாரம் செய்ய வேண்டும். நீங்க எல்லாம், ஏற்கனவே யாருக்கு ஓட்டளிக்க வேண்டும் என, முடிவு செய்திருப்பீங்க.எல்லா கட்சியும் தேர்தல் அறிக்கை வெளியிட்டாங்க. அ.தி.மு.க., தேர்தல் அறிக்கையை நீங்க பார்த்திருப்பீங்க. நம்ம தேர்தல் அறிக்கை நம் வாழ்க்கை. இதோ, பாருங்க, நான் வேட்பாளர் இல்லாமலே வாக்கு கேட்கிறேன்.வேட்பாளர் வேறு இடங்களில் வாக்கு சேகரிக்க சென்றுள்ளார். நான் கடவுள் நம்பிக்கை உள்ளவன். அதனால, உங்களை நம்புகிறேன். இரட்டை இலைக்கு ஓட்டளியுங்கள்.இவ்வாறு அவர் பேசினார்.கார்த்திக் பேசும் போது ஒரு இடத்தில் கூட, வேட்பாளர் மனோஜ்பாண்டியன் பெயரை குறிப்பிடவில்லை. 'அது சரி... அவருக்கு வேட்பாளர் பெயர் தெரிஞ்சாதான சொல்லுவாரு... ஏதோ கடமைக்கு பிரசாரம் செஞ்சிட்டு போறாரு...' என, அங்கு கூடியிருந்த தொண்டர்கள், 'கமென்ட்' அடித்தனர்.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)