'அ.தி.மு.க., கூட்டணி அமோக வெற்றி பெறும்'

சென்னை:''செல்லும் இடங்களில் எல்லாம் மக்கள் ஆதரவும், உற்சாக வரவேற்பும் உள்ளது; அ.தி.மு.க., கூட்டணி அமோக வெற்றி பெறும்,'' என, தே.மு.தி.க., பொருளாளர், பிரேமலதா பேசினார்.


அ.தி.மு.க., கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து, சென்னையில், நேற்று பிரசாரம் செய்த, அவர் பேசியதாவது:மாநிலம் முழுவதும், 20 நாட்களாக தொடர்ந்து பிரசாரம் செய்து வருகிறேன். செல்லும் இடங்களில் எல்லாம், மக்கள் ஆதரவும், உற்சாக வரவேற்பும் உள்ளது.இதை பார்க்கும் போது, 'நாளை நமதே; நாற்பதும் நமதே' என்பது தெளிவாக தெரிகிறது.


லோக்சபா தேர்தலிலும், இடைத்தேர்தல் நடக்கும் சட்டசபை தொகுதிகளிலும், அ.தி.மு.க., கூட்டணி வேட்பாளர்கள் வெற்றி பெற, தே.மு.தி.க., துணை நிற்கும்.எதிரணியை வீழ்த்த, கூட்டணி கட்சியினர் வியூகம் வகுக்க வேண்டும்.


நமக்குள் காழ்ப்புணர்ச்சி, 'ஈகோ' என, எதுவும் இருக்ககூடாது. ஜெயலலிதா, விஜயகாந்த், ராமதாஸ் உருவாக்கிய கட்சிகள், இத்தேர்தலில், வரலாற்று வெற்றியை பெற வேண்டும்.மோடி மீண்டும் பிரதமர் ஆவது உறுதி. எதிரணியில் யார் பிரதமர் வேட்பாளர் என, இதுவரை சொல்ல வில்லை.தமிழகத்தில் மின்வெட்டு, ஊழல் என, அனைத்து பிரச்னைகளுக்கும், தி.மு.க., - காங்., கூட்டணியே காரணம். எனவே, இவர்களுக்கு ஓட்டளித்து, வீணடித்து விட வேண்டாம்.


மீனவர்களுக்கு தனி அமைச்சகம் அமைக்கப்படும் என, பிரதமர் மோடி வாக்குறுதி அளித்து உள்ளார். மோடி மீண்டும் வந்தால் மட்டுமே, மீனவர்களின் பாதுகாப்பு, வாழ்வாதாரம் உறுதி செய்யப்படும். இந்த ஆட்சி தொடர, மக்கள் துணை நிற்க வேண்டும்.இவ்வாறு, பிரேமலதா பேசினார்.வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)