யோகி,மாயாவதி பிரசாரத்திற்கு தடை

புதுடில்லி: உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத், பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி பிரசாரம் செய்ய தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.

தேர்தல் பிரசாரத்தின் போது, ஜாதி மற்றும் மதத்தை அரசியல் லாபத்திற்காக பயன்படுத்தும் கட்சிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கூறி சுப்ரீம் கோர்ட்டில் பொது நல வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு இன்று தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.அப்போது, தேர்தல் ஆணையம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், விதிகளை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க எங்களுக்கு அதிகாரம் இல்லை என்றார்.


தொடர்ந்து, தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் கூறுகையில்; தங்களுக்கு அதிகாரம் இல்லை என தேர்தல் ஆணையம் கூறுகிறது. முதலில் நோட்டீஸ் அனுப்புவோம். பிறகு விளக்கம் கேட்போம். இதன்பிறகே புகார் செய்வோம் எனவும் கூறுகிறது. ஜாதி மற்றும் மத ரீதியாக பேசிய உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத், பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி மீது தேர்தல் ஆணையம் என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இதற்கு, இரண்டு பேருக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டதாக தெரிவித்தார். இதனை தொடர்ந்து வழக்கு விசாரணை நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டது.


இந்நிலையில், தேர்தல் ஆணையம் பிறப்பித்த உத்தரவு: விதிகளை மீறி ஆட்சேபனைக்கு உரிய வகையில் பேசிய உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத் 3 நாட்களும், பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி 2 நாட்களும் பிரசாரம் செய்ய தடை விதிக்கப்படுகிறது. இந்த உத்தரவு நாளை(ஏப்.,16) காலை முதல் அமலுக்கு வரும். இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.


meenakshisundaram - bangalore,இந்தியா
16-ஏப்-2019 05:03 Report Abuse
meenakshisundaram appo ஸ்டாலினுக்கு தடை இல்லையா?
RajanRajan - kerala,இந்தியா
15-ஏப்-2019 20:48 Report Abuse
RajanRajan இந்துகளை துவேஷம் பண்ணும் சுடலை - வீரமணிக்கு ஏன் தடை விதிக்கவில்லை?
தமிழன் - Chennai,இந்தியா
15-ஏப்-2019 19:09 Report Abuse
தமிழன் இந்துக்களை ஏளனம் செய்யும் திருட்டு திமுக மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
15-ஏப்-2019 17:13 Report Abuse
ஜெய்ஹிந்த்புரம்
ganapati sb - coimbatore,இந்தியா
15-ஏப்-2019 17:00 Report Abuse
ganapati sb சிறுபான்மையினரை வாக்குகளை பெற பெரும்பான்மையினரை அவதூறு செய்யும் வீரமணி விசிக திமுக மீது மேலும் நடவடிக்கை எடுக்கப்படுமா
Chowkidar NandaIndia - Vadodara,இந்தியா
15-ஏப்-2019 16:02 Report Abuse
Chowkidar NandaIndia பேசத்தெரியாத சுடலை, ஹிந்துக்களின் எதிரி கிறுக்குமணி, உளறுவாயன் ஓவைஸி, அழுவாச்சி குமார், அராஜக ஆஸம் கான், தீண்ட ஆளில்லாத குசுப்பூ இவர்கள் கூடத்தான் வாய்க்கு வந்தபடியெல்லாம் பேசியிருக்கிறார்கள். இவர்கள் இஷ்டத்திற்கு பேசுவது மட்டும் தெரியவில்லையா?
தம்பி - பொள்ளாச்சி ,இந்தியா
15-ஏப்-2019 15:45 Report Abuse
தம்பி
Venkat - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
15-ஏப்-2019 15:40 Report Abuse
Venkat கேடு கேட்ட ஜென்மங்கள் இந்த அரசியல் வாந்திகள். என்னத்த போட்டு தின்கிறாங்க?
தாண்டவக்கோன் - Kolhapur Circle, Belgaum,இந்தியா
15-ஏப்-2019 15:37 Report Abuse
தாண்டவக்கோன்
தம்பி - பொள்ளாச்சி ,இந்தியா
15-ஏப்-2019 15:36 Report Abuse
தம்பி இதெல்லாம் ரொம்ப ஓவர் யோகி மட்டும் தான் இப்படி பேசினாரா ஏன் தமிழகத்தில் வழக்கு பதியவில்லை
மேலும் 1 கருத்துக்கள்...
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)