'என்னை தலைவராக்கிய சிவகங்கை': கமல் நினைவலை

சிவகங்கை லோக்சபா தொகுதியில் போட்டியிடும், மக்கள் நீதி மையம் வேட்பாளர், சினேகனை ஆதரித்து பேசுவதற்காக, கட்சியின் தலைவர் கமல், கருப்பு பேன்ட், டீ - ஷர்ட் அணிந்து மேடைக்கு வந்தார்.'டார்ச் லைட்' உடன் வந்த கமல், மக்களை பார்த்து, 'லைட்' அடித்து கையசைத்தார். திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் நிற்க வேண்டும் என, கமலிடம் தொண்டர்கள் கோரிக்கை விடுத்தனர்.கமல் பேசுகையில், 'மற்ற கட்சிகளின் கூட்டங்கள், பணம் கொடுத்து அழைத்து வரப்பட்டன. 'ஆனால், மக்கள் நீதி மையத்திற்கென யாரையும் அழைக்காமல் தொண்டர்கள் தானாக வருகின்றனர். என் சித்தப்பா, சிவகங்கையில் தான் ஆசிரியராக இருந்தார். 'இங்கு தான் நானும் தங்கி, நல்ல விஷயங்களை கற்றுக்கொண்டேன். நான் தலைவராக வர, துாண்டுகோலாக இருந்த நகரம் சிவகங்கை. இங்கு தான் அதற்கான தகுதியை வளர்த்து கொண்டேன்' என்றார்.கூட்டம் முடிந்ததும், 'தொண்டர்கள், இங்கு சேர்ந்த குப்பையை அகற்றிவிட்டு தான் செல்ல வேண்டும். 'அதே போன்று வாகனங்களில் செல்லும் போதும் கவனம் தேவை. பணத்திற்காக ஓட்டு போடுவதை தவிர்த்து நேர்மையாக, உண்மையாக ஓட்டளியுங்கள்' என, ஆலோசனை வழங்கினார்.- நமது நிருபர் -வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)