சுயஉதவி குழுக்களை வளைக்கும் கட்சிகள்

தேர்தல் பிரசாரம் முடிவுற உள்ள நிலையில், பணப் பட்டுவாடாவிற்காக, அ.தி.மு.க., -- தி.மு.க.,வினர், சுய உதவிக் குழுக்களை வளைக்க, தீர்மானித்து உள்ளனர்.


லோக்சபா தேர்தல் மற்றும் 18 சட்டசபை தொகுதிகளுக்கான, இடைத்தேர்தலை முன்னிட்டு, அரசியல் கட்சிகள், வாக்காளர்களுக்கு, பணம் பட்டுவாடா செய்வதை தடுக்க, தேர்தல் பறக்கும் படையினர் மற்றும் வருமான வரித் துறையினர், தீவிர கண்காணிப்பில் ஈடுபடுகின்றனர்.வரும், 18ல் ஓட்டுப் பதிவு நடக்கிறது. அதற்கு, மூன்று நாட்கள் மட்டுமே உள்ளன. முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள், வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்ய, ஆயத்தமாகி வருகின்றனர்.


ஸ்ரீபெரும்புதுார் லோக்சபா தொகுதிக்கு உட்பட்ட, தாம்பரம் சட்டசபை தொகுதியில், அ.தி.மு.க., மற்றும் தி.மு.க., நிர்வாகிகள், தொகுதியில் உள்ள, மகளிர் சுயஉதவிக் குழுக்களின் பட்டியலை, அந்தந்த வட்டச் செயலர்களிடம் கேட்டுப் பெற்றுள்ளனர்.அவர்களுடன், விரைவில் ரகசிய கூட்டம் நடைபெற உள்ளதாகவும், அப்போது, பணம் வினியோகிக்கப்பட உள்ளதாகவும், தகவல் வெளியாகி உள்ளது.


முந்தைய தேர்தல்களில், கட்சி நிர்வாகிகளை வைத்தே, பணம் வினியோகிக்கப்பட்ட நிலையில், தேர்தல் கமிஷனின் நடவடிக்கைகளில் இருந்து தப்பிக்க, இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.அதேநேரம், அ.ம.மு.க.,வினர், தங்களின் தகவல் தொழில்நுட்ப அணியினரை வைத்து, கட்சியில் உள்ள இளைஞர்கள் வாயிலாக, பணப் பட்டுவாடா செய்ய, முடிவு செய்துள்ளதாகவும், பேச்சு எழுகிறது.

- -நமது நிருபர் --



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)