300 பரிசுப் பெட்டிகளில் சாக்லெட் :அ.ம.மு.க.,வினரிடம் விசாரணை

கொடுங்கையூர்:பரிசுப் பெட்டியில் சாக்லெட் சப்ளை செய்த, அ.ம.மு.க.,வினரிடம், போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


பெரம்பூர் தொகுதி இடைத்தேர்தலில், அ.ம.மு.க., சார்பில் வெற்றிவேல் போட்டியிடுகிறார். கொடுங்கையூர், சீத்தாராமன் நகரில், அ.ம.மு.க.,வினர், வெற்றிவேல், தினகரன் புகைப்படம் இடம் பெற்ற, பரிசுப் பெட்டியை பொதுமக்களுக்கு சப்ளை செய்வதாக, பறக்கும் படை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.


பறக்கும் படை அதிகாரி, ரமேஷ் தலைமையில், 10க்கும் மேற்பட்டோர், நேற்று முன்தினம் நள்ளிரவு, தகவல் வந்த பகுதியில் சோதனையிட்டனர்.அங்கு, தினகரன், வெற்றிவேல் படம் இடம் பெற்ற, சின்ன பெட்டியில், இரண்டு சாக்லெட்களை வைத்து, அப் பகுதி முழுவதும், சப்ளை செய்தது தெரிய வந்தது.அங்கிருந்த, 300க்கும் மேற்பட்ட, சிறிய பரிசுப் பெட்டிகளையும், சாக்லெட்களையும் பறிமுதல் செய்தனர். கொடுங்கையூர் போலீசார், அ.ம.மு.க.,வினரிடம் விசாரிக்கின்றனர்.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)