அண்ணாத்தே ஆடுறார் ஒத்திக்கோ ஒத்திக்கோ!'

தே.மு.தி.க., வேட்பாளருக்கு ஆதரவாக, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., 'குத்தாட்டம்' போட்டு ஓட்டு சேகரித்தார்.
கள்ளக்குறிச்சி லோக்சபா தொகுதி, தே.மு.தி.க., வேட்பாளர் சுதீஷை ஆதரித்து, சேலம் மாவட்டம், ஆத்துார் அருகே கல்வராயன்மலை, கருமந்துறையில், அ.தி.மு.க., கூட்டணி கட்சியினர், நேற்று முன்தினம், பிரசாரம் மேற்கொண்டனர்.அப்போது, ஆத்துார் தொகுதி, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., சின்னதம்பி, வீதிகளில் குத்தாட்டம் போட்டபடி, மக்களை சந்தித்து ஓட்டு கேட்டார். தே.மு.தி.க.,வுக்கு, 'முரசு' சின்னம் என்பதால், அவரும், வேட்பாளரும், மேளத்தை அடித்தபடி சென்று பிரசாரம் செய்தனர்.இவர்களுடன் மகளிரணியினர், இளைஞர்கள், கட்சியினர் உற்சாகமாக குத்தாட்டம் போட்டு, மக்களை கவர்ந்தனர். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில், அ.தி.மு.க., வேட்பாளராக போட்டியிட்ட மதுசூதனனுக்கு ஆதரவாக, பிரசாரம் செய்த போதும், எம்.எல்.ஏ., சின்னதம்பி, குத்தாட்டம் போட்டு, ஓட்டு சேகரித்தார்.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)