புத்தராக தெரிகிறார் ராகுல்


மதுரையில், காங்., மற்றும் தி.மு.க., வேட்பாளர்களை ஆதரித்து, மண்டேலா நகர் ரிங் ரோட்டில், காங்., தலைவர் ராகுல் பங்கேற்ற பொதுக் கூட்டம் நடந்தது.இதில், தமிழக, காங்., தலைவர் அழகிரி பேசியதாவது:பார்லிமென்டில், அற்புதமாக உரையாற்றினார் ராகுல். அவர் எழுப்பிய பல கேள்வி களுக்கு, பிரதமர் மோடியால், பதில் கூற முடியவில்லை. ரபேல் விமானம் வாங்கியதில், மோடி அரசு தவறு செய்துள்ளது. இது தொடர்பாக, மத்திய அரசு முன்வைத்த வாதத்தை, உச்ச நீதிமன்றம் ஏற்க வில்லை. ரபேல் பேரம் குறித்து ராகுல் பேசினால், அதற்கு பதில் சொல்லாமல், சோனியா, இந்திரா என, அவரது குடும்பத்தை மோடி விமர்சிக்கிறார்.சென்னை கல்லுாரி நிகழ்ச்சியில், மாணவி ஒருவர் ராகுலை பார்த்து, 'மோடியை ஏன் கட்டிப்பிடித்தீர்கள்?' என்றார். அதற்கு, 'மோடி கடுமையாக தாக்கி பேசினார். அவருக்கு பதில் சொல்ல, நானும் கடுமையாக பேச வேண்டும். ஆனால், இந்திய கலாசாரப்படி ஒருவர் நம் மீது வெறுப்பை உமிழ்ந்தால், அவர் மீது நாம் அன்பு காட்டிவிட வேண்டும். 'நான் கட்டித் தழுவும்போது, அவருக்குள் அன்பு ஏற்பட்டதோ இல்லையோ, எனக்கு நிம்மதி கிடைத்தது' என்றார் ராகுல்.ஒருவர் வெறுப்பு காட்டினால், அதற்கு பதில் அன்பு காட்ட வேண்டும் என, 2,500 ஆண்டுகளுக்கு முன்பே புத்தர் கூறியுள்ளார். அவர் கூறியபடி, ராகுல் செய்து காட்டியுள்ளார். ராகுலை புத்தராக பார்க்கிறேன்.இவ்வாறு அவர் பேசினார்.'நாட்டை ஆள நினைக்கிறார் ராகுல். ஆனால், அவரை வாழ்க்கையில் முற்றும் துறந்த துறவியான, புத்தராக பார்க்கிறேன் என்கிறாரே அழகிரி' என, கூட்டத்தில் பங்கேற்ற முக்கிய தலைவர்கள் கிசுகிசுக்க, அருகில் இருந்தவர்கள், புன்சிரிப்பு சிரித்தனர்.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)