பீஹார், ஜார்க்கண்டில் இவ்வளவு தான்...

நாவை அடக்க பா.ஜ., 'அட்வைஸ்'
பீஹாரின், பக்ஸர் லோக்சபா தொகுதி, பா.ஜ., வேட்பாளருக்கு கட்சி தலைமை கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. அங்குள்ள, 40 லோக்சபா தொகுதிகளில், பக்ஸர் தொகுதி, பா.ஜ., வேட்பாளராக, மத்திய இணை அமைச்சர், அஷ்வினி குமார் சவ்பே போட்டியிடுகிறார்.இவர், சமீபத்தில், பிரசார கூட்டத்தில், நீதிபதியை விமர்சனம் செய்து பேசியது சர்ச்சைக்குள்ளானது.இதையடுத்து, நாவை அடக்குமாறு, பா.ஜ., தலைமை, அவருக்கு, 'அட்வைஸ்' செய்துள்ளது. 'விதிகளுக்கு மாறாகவும், சட்டத்துக்கு எதிராகவும் பேசி, சர்ச்சையில் சிக்க வேண்டாம். இது போன்ற பேச்சால், நாடு முழுவதும் உள்ள, பா.ஜ., வேட்பாளர்களின் ஓட்டுகள் பாதிப்படையும்' என, பா.ஜ., தலைமை எச்சரித்துள்ளது.
பணம் இல்லை; 'சீட்' வேண்டாம்

பீஹாரில், ஏழு கட்டங்களாக தேர்தல் நடக்கிறது. இதில், ஐக்கிய ஜனதா தளம், பா.ஜ., கட்சிகள் கூட்டணி அமைத்து, வேட்பாளர்களை நிறுத்தியுள்ளன. இங்குள்ள, சிதாமாரி லோக்சபா தொகுதியில், ஐக்கிய ஜனதா தளத்தை சேர்ந்த, டாக்டர் வருண் குமார் வேட்பாளர் ஆனார்.ஆனால், மனு தாக்கல் செய்யும் முன், போட்டியிட மறுத்து, தனக்கு வழங்கிய சீட்டை, முதல்வர் நிதிஷ் குமாரிடம் ஒப்படைத்தார். அவருக்கு பதில், பா.ஜ.,வில் இருந்து, ஐக்கிய ஜனதா தளத்துக்கு வந்த, முன்னாள், எம்.எல்.ஏ., சுனில்குமார் பின்டு நிறுத்தப்பட்டு உள்ளார்.போட்டியிட மறுத்தது குறித்து, டாக்டர் வருண் குமார் கூறுகையில், 'கூட்டணி கட்சியில் இருந்து வரக்கூடிய ஒவ்வொருவரும், லட்சக்கணக்கில், பணம் கேட்கின்றனர். என்னிடம் பணமே கிடையாது. அரசியல் இவ்வளவு மோசமாக தரம் தாழும் என நினைக்கவில்லை' என கூறி, கட்சிகளை தோலுரித்து உள்ளார்.

இளங்கன்று போட்டி!

ஜார்க்கண்ட் மாநிலம், ராஞ்சி லோக்சபா தொகுதியின், பா.ஜ., வேட்பாளராக, ஜார்க்கண்ட் காதி வாரியத்தின் தலைவர், சஞ்சய் சேத் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து, காங்கிரசில், பழம் தின்று கொட்டை போட்ட, மூத்த தலைவர், முன்னாள் மத்திய அமைச்சர், சுபோத் காந்த் சஹாய் போட்டியிடுகிறார்.இளம் கன்றாக களம் இறங்கியுள்ள, சஞ்சய் சேத், தேர்தல் களத்தில் தடுமாறும் நிலை ஏற்பட்டுஉள்ளது.மேலும், பா.ஜ., மூத்த தலைவரும், காங்கே தொகுதி, எம்.எல்.ஏ.,வுமான, ஜித்து சரண் ராம், தனக்கு, பா.ஜ., 'சீட்' கிடைக்காததால், சுயேச்சையாக போட்டியிடுவதாக அறிவித்துள்ளார். அவரை சரிக்கட்ட வேண்டிய நெருக்கடியும், சஞ்சய் சேத்துக்கு ஏற்பட்டுள்ளது.இந்நிலையில், சஞ்சய் சேத், அனுபவமில்லாதவராக உள்ளார் என, உள்ளூர், பா.ஜ.,வினர் விமர்சித்து வருகின்றனர்.இதுகுறித்து, சஞ்சய் சேத் கூறுகையில், '40 ஆண்டு கால அரசியல் அனுபவம் உடைய, காங்கிரசின் சுபோத் காந்த் சஹாய் அளவுக்கு, எனக்கு அனுபவம் இல்லை. ஆனால், அவரது அனுபவ அளவுக்கு, நெஞ்சுல, 'தில்' இருக்கிறது' என, பதிலடி கொடுத்துள்ளார்.

பாசமா... பதவியா?

ஜார்க்கண்ட், கன்டி லோக்சபா தொகுதி வேட்பாளராக, பா.ஜ.,வை சேர்ந்த, அர்ஜுன் முண்டா போட்டியிடுகிறார். அவரை வெற்றி பெற வைக்க, ஜார்க்கண்ட் ஊரக மேம்பாட்டு துறை அமைச்சர், நீல் காந்த் முண்டா பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.இந்நிலையில், இந்த தொகுதி யின், காங்., வேட்பாளராக, காளிச்சரண் முண்டா நியமிக்கப்பட்டுள்ளார். இவர், பா.ஜ., தொகுதி பொறுப்பாளர், நீல் காந்த் முண்டாவின் சகோதரர்.எனவே, தன் சகோதரருக்காக, அமைச்சர் பதவியை விட்டு, பிரசாரம் செய்வதா அல்லது பதவியை தக்க வைக்கும் வகையில், கட்சி வேட்பாளர்,அர்ஜுன் முண்டாவை வெற்றி பெற வைப்பதா என்ற, இக்கட்டான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)