நச்சு பிரசாரம்!

பிரதமர் நரேந்திர மோடி, நாட்டில் உள்ள சிறுபான்மையினருக்கு எதிராக, தொடர்ந்து நச்சு பிரசாரம் செய்து வருகிறார். சிறுபான்மையினரை விரட்டி அடிக்க வேண்டும் என்பதே, அவரது எண்ணம்.
மெஹபூபா முப்தி , தலைவர், மக்கள் ஜனநாயக கட்சி .,
வாங்களேன் பார்க்கலாம்!
பிரதமர் மோடி, வாரணாசியை தவிர, பீஹாரில் உள்ள, பாட்னா சாஹிப் தொகுதியிலும், போட்டியிடப் போவதாக, தொடர்ந்து செய்திகள் வெளியாகி வந்தன. ஆனால், கடந்த சில நாட்களாக, அதுகுறித்து எந்த சத்தமும் இல்லை. பாட்னா சாஹிப் தொகுதிக்கு வந்து போட்டியிடுங்களேன், பார்க்கலாம்.
சத்ருகன் சின்ஹா , மூத்த தலைவர், காங்கிரஸ்.,
பொய் சொல்லாதீங்க!
சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு வரும் பக்தர்களை, கேரள அரசு, கைது செய்யப் போவதாக, தமிழகத்திலும், கர்நாடகாவிலும் நடந்த பிரசாரங்களில், பிரதமர் கூறியுள்ளார். அய்யப்பன் பெயரை பயன்படுத்தி, ஏன் இப்படி பொய் சொல்கிறீர்கள்?
பினராயி விஜயன் , கேரள முதல்வர், மார்க்சிஸ்ட்.,



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)