திருமாவுக்கு தி.மு.க., தடை

'விழுப்புரம், சிதம்பரம் தவிர, வேறு தொகுதிகளில் பிரசாரம் செய்ய வேண்டாம்' என, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனுக்கு, தி.மு.க., விதித்துள்ள கட்டுப்பாட்டால், அக்கட்சியினர் அதிருப்தி அடைந்துள்ளனர்.இதுகுறித்து, வி.சி., வட்டாரங்கள் கூறியதாவது:கூட்டணியில் இருந்தாலும், சில தொகுதிகளில், வி.சி., கட்சியினர், பிரசாரத்திற்கு வந்தால், வேறு சமூகத்தினரின், ஓட்டுகள் தங்களுக்கு கிடைக்காது என, தி.மு.க., தலைமை கருதுகிறது. இதனால், தி.மு.க., நிர்வாகிகள், 'உங்கள் கட்சி போட்டியிடும், விழுப்புரம், சிதரம்பரத்தில், தேர்தல் பணியில் கவனம் செலுத்தவும்; மற்ற தொகுதிகளில், நாங்கள் பார்த்து கொள்கிறோம்' என, வி.சி., தலைமையிடம் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து, வி.சி., தலைவர் திருமாவளவன், தான் போட்டியிடும் சிதம்பரம் மற்றும் விழுப்புரம், பெரம்பலுார் என, சில தொகுதிகளில் மட்டும், பிரசாரம் செய்து வருகிறார்.அ.தி.மு.க., கூட்டணியில் அக்கட்சிகளின் தலைவர்கள், தங்கள் வேனில், வேட்பாளர் மற்றும் அந்த தொகுதியில் உள்ள, தன் கட்சியின் முக்கிய நிர்வாகியையும் ஏற்றி, பிரசாரம் செய்கின்றனர். இதனால், கட்சியினருக்கு, தொகுதி மக்களிடம் அறிமுகமாகும் வாய்ப்பு கிடைக்கிறது.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)