வன்னியர் சமூக முக்கியஸ்தர்களை இரவில் சந்திக்கும், பா.ம.க.,வினர்

லோக்சபா தேர்தல் கள நிலவரம், சாதகமாக இல்லை என்ற தகவலால், வன்னியர் சமூக முக்கியஸ்தர்களை, பா.ம.க., நிர்வாகிகள், நள்ளிரவில் சந்தித்து, ஆதரவு கோரி வருகின்றனர். விரும்பவில்லை. இது குறித்து, அக்கட்சியினர் கூறியதாவது : அ.தி.மு.க., கூட்டணியில், மத்திய சென்னை, ஸ்ரீபெரும்புதுார், அரக்கோணம், கடலுார், விழுப்புரம், திண்டுக்கல், தர்மபுரி ஆகிய, ஏழு தொகுதிகளில், பா.ம.க., போட்டியிடுகிறது.அ.தி.மு.க., தலைவர்களை கடுமையாக விமர்சித்த நிலையில், அக்கட்சியுடன், பா.ம.க., கூட்டணி அமைத்ததை, சொந்த கட்சி தொண்டர்களே விரும்பவில்லை.
கூட்டணியில் இணைந்ததற்கு பின், பா.ம.க., நிறுவனர் ராமதாஸ், கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.அப்போது அவர், பல தேர்தல்களில், தனித்து போட்டியிட்டதால், கட்சிக்கு ஏற்பட்ட இழப்பு; தொண்டர்கள் சோர்வு உள்ளிட்ட காரணங்களை விரிவாக தெரிவித்தார்.அதை ஏற்ற கட்சியினர், அ.தி.மு.க.,வுடன் இணைந்து, தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பா.ம.க.,வினருக்கு, அ.தி.மு.க., நிர்வாகிகளிடம் கிடைக்கும் வரவேற்பு, தொண்டர்களிடம் கிடைப்பதில்லை. தி.மு.க., தலைவர்ஸ்டாலின், பா.ம.க., வேட்பாளர்களை தோற்கடிக்க, தனி கவனம் செலுத்தி வருகிறார்.
அதன்படி, அவரின் ஆதரவு பெற்ற, வன்னியர் சமூகத்தை சேர்ந்த பிரபலங்கள், தொகுதி வாரியாக சென்று, பா.ம.க., ஒன்றிய செயலர், தொண்டர்களை சந்தித்து, தேர்தல் பணியில் இருந்து, ஒதுங்கி இருக்கும்படி கூறி வருகின்றனர்.மேலும், ராமதாஸ் மற்றும் அவரது மகன் அன்புமணி, அ.தி.மு.க., தலைவர்களை விமர்சித்து பேசிய வீடியோ பதிவுகள், தொடர்ந்து, சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டு வருகின்றன.ஆதரவு கோரல்இந்த சூழலில், ஏழு தொகுதிகளின் கள நிலவரம், தங்களுக்கு சாதக மாக இல்லை என்று, பா.ம.க., தலைமைக்கு, தகவல் சென்றுள்ளது.
இதையடுத்து, அக்கட்சியின் மூத்த நிர்வாகிகள், பா.ம.க., போட்டியிடும் தொகுதிகளில், வன்னியர்சமூகத்தை சேர்ந்த, பள்ளி தலைமை ஆசிரியர்கள், கல்லுாரி பேராசிரியர்கள், டாக்டர்கள் உள்ளிட்ட முக்கியஸ்தர்களை சந்தித்து, தங்கள் சமூகத்திற்கு, ராமதாஸ் வாயிலாக கிடைத்த நன்மைகளை சொல்லி, ஆதரவு கோரி வருகின்றனர்.அரசு துறைகளில் வேலை செய்வதால், பகல் நேரத்தில் சந்தித்து, ஆதரவு கோருவதை, முக்கியஸ்தர்களும் விரும்பவில்லை. இதனால், நள்ளிரவில், வீடுகளுக்கு சென்று, பா.ம.க.,வினர் ஆதரவு கோரி வருகின்றனர்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)