'ரெய்டு'க்கு நான் காரணமா? பொங்குகிறார் பொன்.ராதா

நாகர்கோவில் : ''காங்கிரஸ் கட்சி போன்று, கீழ்த்தரமான அரசியலை நான் செய்ய மாட்டேன்,'' என, மத்திய இணை அமைச்சர், பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.நாகர்கோவிலில் நேற்று அவர் அளித்த பேட்டி:காங்கிரஸ் வேட்பாளர், வசந்தகுமார் உறவினரிடம் நடந்த, வருமான வரி சோதனைக்கு, நான் தான் காரணம் என கூறியிருப்பதாக அறிந்தேன். அவர்களை போல் நான், கீழ்த்தரமான அரசியல் செய்ய மாட்டேன்.உப்பை தின்றவன், தண்ணீர் குடித்தாக வேண்டும் என்ற பழமொழி உள்ளது. அதேபோல், தவறு செய்தவர்கள், அதற்கான பலனை அனுபவிக்க வேண்டும்.

காங்கிரஸ் வேட்பாளர்வசந்தகுமார், பணத்தால் சாதிக்க முடியும் என நினைக்கிறார். டோக்கன் கொடுத்து, 'நெல்லையில் சென்று பொருட்கள் வாங்கி கொள்ளலாம்' என கூறியுள்ளனர். தங்களது நிறுவனத்தில் பொருட்கள் வாங்க வரும் வாடிக்கையாளர்களுக்கு, பொருட்களுடன் பணமும் கொடுத்து, ஓட்டுகளை சேகரிக்கின்றனர்.இது போன்ற தகவல்கள், எனக்கு வந்து கொண்டு இருக்கின்றன. கன்னியாகுமரியில் இதுவரை, இது போன்ற ஒரு மோசமான நிலை வந்தது இல்லை. வசந்தகுமார், கன்னியாகுமரியில் ஒரு மோசமான நிலையை ஏற்படுத்தி உள்ளார்.இவ்வாறு, அவர் கூறினார்.வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)