ஓட்டு இயந்திரத்துடன் போட்டோ எடுத்தவர் கைது

ஐதராபாத் : தெலங்கானாவில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாக்கப்பட்ட அறைக்குள் நுழைந்து, சட்டவிரோதமாக படம் பிடித்த தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சி பிரமுகர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தெலுங்கானா லோக்சபா தேர்தலுக்காக சின்னம் மற்றும் பெயர்கள் பொருத்தப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் பொக்ரம் பகுதியில் சீல் வைக்க தயாராக இருந்த பாதுகாப்பு அறைக்குள் தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சி பிரமுகர் வெங்கடேஷ் நுழைந்தார். தான் அக்கட்சி முகவர் எனவும் , மால்கஜ்கிரி தொகுதியில் போட்டியிடும் மார்ரி ராஜசேகர் சார்பில் இயந்திரங்களை பார்வையிட வந்ததாகவும் தெரிவித்தார். பின்பு அறைக்குள் நுழைந்த அவர், ஓட்டிங் மெஷினை புகைப்படம் எடுக்க தொடங்கியுள்ளார். இதைக்கண்ட போலீசார், சட்டவிரோதமாக வாக்கு இயந்திரங்களை படம் பிடித்ததாக அவரை கைது செய்தனர்.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)