விஜயகாந்த் நாளை பிரசாரம்

சென்னை: தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த், உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளதால், மருத்துவர்கள் அறிவுரைப்படி, பிரசாரத்திற்கு செல்லாமல், தனது விருகம்பாக்கம் வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார். விஜயகாந்திற்கு பேச்சு பயிற்சியும் அளிக்கப்பட்டு வருகிறது. அவர் விரைவில் பிரசாரம் மேற்கொள்வார் என அவரது மனைவி பிரேமலதா கூறியிருந்தார்.

இந்நிலையில், விஜயகாந்த் நாளை(ஏப்.,15) மாலை 4 மணிக்கு பிரசாரம் மேற்கொள்ள உள்ளதாக தேமுதிக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மத்திய சென்னை பாமக வேட்பாளர் சாம்பால், தென்சென்னை அதிமுக வேட்பாளர் ஜெயவர்தன், வட சென்னை தேமுதிக வேட்பாளர் மோகன்ராஜ் ஆகியோரை ஆதரித்து விஜயகாந்த் பேச உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)