அ.தி.மு.க., கூட்டணி பக்தி கூட்டணி: பிரேமலதா பிரசாரம்

விருதுநகர்:''அ.தி.மு.க.,கூட்டணி பக்தி கூட்டணி ,''என, தே.மு.தி.க., பொருளாளர் பிரேமலதா பேசினார்.

விருதுநகரில் லோக்சபா தொகுதி தே.மு.தி.க., வேட்பாளர் அழகர்சாமி பிரசாரத்தில் ஈடுபட்ட அவர் பேசியதாவது: விஜயகாந்த் கதர் சட்டை போடுவதற்கு காரணமே காமராஜர் தான். ஒரு பெண்ணாக இப்பகுதிகளில் உள்ள குடிநீர் பிரச்னையை என்னால் உணர முடிகிறது. மத்தியிலும், மாநிலத்திலும் ஒரே ஆட்சி இருக்கும்போது மக்களுக்கான திட்டங்களை உடனடியாக நிறைவேற்ற முடியும்.


இங்கு தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டத்தை கொண்டு வந்து குடிநீர் பிரச்னையை தீர்த்து வைப்போம். விருதுநகரில் மருத்துவகல்லுாரி அமைக்கப்படும். 2011 ல் சேர்ந்த அ.தி.மு.க., தே.மு.தி.க., கூட்டணி ராசியான கூட்டணி, மக்கள் விரும்பும் கூட்டணியாக இருந்தது. மீண்டும் அந்த வரலாறு திரும்பி உள்ளது. பக்திமான்கள் அதிகம் உள்ள கூட்டணி. கடவுள் இருக்கிறார் என நம்புகின்ற கூட்டணி.


ஆனால் தி.மு.க., காங்., கூட்டணி கடவுளே இல்லை என சொல்லி இந்து கடவுள்களை மட்டும் விமர்ச்சிக்கின்ற கூட்டணி. எங்கள் கூட்டணி பக்தி கூட்டணி. சித்திரை திருவிழாவில் அழகர் ஆற்றில் இறங்குவது போல், தே.மு.தி.க., வேட்பாளர் அழகர்சாமி மக்கள் மனதில் இறங்கி , விருதுநகர் தொகுதிக்கு வேண்டிய அனைத்து திட்டங்களையும் நிறைவேற்றுவார். காங்., சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ஏற்கனவே இந்த தொகுதியில் எம்.பி.,யாக இருந்துள்ளார். எப்போதவது தொகுதி பக்கம் வந்துள்ளாரா,என்றார்.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)