நீதிமன்ற படிகளில் நிற்பவர் தொகுதிக்கு வருவாரா:மக்கள் நீதி மைய தலைவர் கமல் பேச்சு

சிவகங்கை:சிவகங்கையில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவர் எப்போதும் நீதிமன்ற படிகளில் ஏறி இறங்கி வருகிறார். அவரா தொகுதிக்கு வளர்ச்சி பணிகளை செய்வார்,'' என சிவகங்கையில் மக்கள் நீதி மய்ய வேட்பாளர் சினேகனை ஆதரித்து, அதன் தலைவர் கமல் பேசினார்.


அவர் பேசியதாவது: சிவகங்கை மெட்ரோ பாலிடன் சிட்டி' போல் இருந்தது. இன்றைக்கு மிக மோசமாக மாறிவிட்டது. இந்தியாவிலேயே பிரசித்தி பெற்றது சிவகங்கை தொகுதி. இங்கு நின்றவர்களுக்கு தான் சிவகங்கை பெருமை தேடி தந்துள்ளது. இங்கிருந்து தான் முரடர்கள், திருடர்களை எதிர்க்கும் தைரியம் எனக்கு கிடைத்தது.இக்கூட்டம் முடிந்த பின் இங்குள்ள குப்பையை அகற்றி விட்டு என் தொண்டர்கள் செல்வார்கள்.


இவர்கள் கையில் ஆட்சியை கொடுத்து பாருங்கள் அங்குள்ள குப்பையையும் அகற்றிவிடுவர். மக்களுக்கு துரோகம் செய்பவர்கள் கண்டிப்பாக எங்களுக்கும் விரோதிகள் தான். நேர்மை, உண்மை என்பது தான் எங்கள் வேத வாக்கு.எப்போது பார்த்தாலும் நீதிமன்ற படிகளில் ஏறி இறங்கும் வேட்பாளர்கள் (காங்., வேட்பாளர் கார்த்தி) எப்படி தொகுதிக்கு வந்து வளர்ச்சி பணிகளை செய்வார்கள்.உங்கள் ஆட்சி காலத்தில் ஒரு ஐ.டி., ' பூங்காவாவது வந்திருக்க வேண்டாமா. எங்களுக்கு கொடுக்கப்படும் காலத்திற்குள் 50 லட்சம் பேருக்கு வேலை தரப்படும். சிவகங்கையில் கண்டிப்பாக ஐ.டி.,' பூங்கா மையம் அமைக்கப்படும். தமிழகத்தில் 60 ஆயிரம் கிராமங்களில் 30 ஆயிரம் ஏரிகள், குளங்களை துார்வாருவோம்.போலீசை ஏவல் துறை போல் பயன்படுத்தி ஆம்புலன்ஸ், போலீஸ் வாகனங்களில் பணத்தை கடத்துகின்றனர். சிவகங்கைக்கு இடைக்காட்டூர் வைகை கூட்டுகுடிநீர் திட்டத்தை விரிவாக்கம் செய்ய ரூ.11 கோடி ஒதுக்கினர். அந்த நிதி என்ன ஆனது என தெரியவில்லை. இவ்வாறு அவர் பேசினார்.வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)