திடீர் தேர்தல் நல்லதல்ல: பா.ஜ., - பா.ம.க., பிரசாரம்

சட்டசபைக்கு, திடீரென தேர்தல் வந்தால், வளர்ச்சி பணிகள் முற்றிலுமாக பாதிக்கப்படும்' என, அ.தி.மு.க., கூட்டணி கட்சியினர், பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழகத்தில், லோக்சபா தேர்தலுடன், 18 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் நடக்கிறது. அதில், பாதிக்கும் மேற்பட்ட இடங்களில், அ.தி.மு.க., வென்றால் தான், ஆட்சியை தக்கவைக்க முடியும். அனைத்து தொகுதிகளிலும் வென்றால், எந்த பிரச்னையும் இன்றி, எஞ்சிய இரு ஆண்டு ஆட்சியை நடத்தி முடிப்பதுடன், 2021 சட்டசபை தேர்தலிலும், எதிர்க்கட்சிகளை சந்திக்க முடியும்.

ஒரு மாதமாக நடந்து வந்த தேர்தல் பிரசாரம், 16ம் தேதி மாலையுடன் முடிவடைகிறது. இந்நிலையில், வாக்காளர்களை கவரும் வகையில், அ.தி.மு.க., கூட்டணியில் உள்ள, பா.ஜ., - பா.ம.க.,வினர் நுாதன முறையில், பிரசாரம் செய்து வருகின்றனர்.

இது குறித்து, அக்கட்சியினர் கூறியதாவது: லோக்சபா தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும், நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன. இதனால், தாலிக்கு தங்கம்; இலவச, 'லேப்டாப்' மற்றும் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு, 2,000 ரூபாய் வழங்கும் திட்டங்களை, செயல்படுத்த முடியவில்லை.இந்த விபரம் தெரியாத பலரும், 'ஏன், திருமண நிதியுதவி வழங்கவில்லை; 2,000 ரூபாய் தருவதில்லை' என, கேட்கின்றனர்.


தேர்தலில் எப்படியும் வெற்றி பெற, வாக்காளர்களுக்கு தருவதற்காக, தி.மு.க., பல கோடி ரூபாயை, தொகுதிகளில் இறக்கியுள்ளது.எனவே, 'சட்டசபைக்கு திடீரென தேர்தல் வந்தால், எந்த திட்டங்களையும் செயல்படுத்த முடியாது; இதனால், அ.தி.மு.க., ஆட்சி தொடர்ந்து செயல்பட, எங்கள் கூட்டணிக்கு ஓட்டளிக்கவும்' என, பிரசாரம் செய்து வருகிறோம்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

- நமது நிருபர் -வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)