கார்த்தியின் பழைய, 'டுவிட்' தி.மு.க., ஓட்டுக்கு வேட்டு

சிவகங்கை லோக்சபா தொகுதி, காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி, 'டுவிட்டரில்' போட்ட பழைய, தகவல் ஒன்று, 'வாட்ஸ் ஆப்'பில், இப்போது பரவுவதால், அது, அவருக்கு விழும், தி.மு.க., ஓட்டுகளுக்கு வேட்டு வைக்குமோ என்ற, கேள்வி எழுந்துள்ளது.கார்த்தி, 2014 லோக்சபா தேர்தலில், தி.மு.க., - அ.தி.மு.க., - பா.ஜ.,வை எதிர்த்து, காங்கிரஸ் சார்பில், தனித்து போட்டியிட்டு, டிபாசிட் இழந்தவர். தேர்தலுக்கு முன்னும், பின்னும், திராவிட கட்சிகளை, அதிகம் விமர்சித்து பேசியும், சமூக ஊடகங்களில், எழுதியும் வந்தார். அது அப்போது, தி.மு.க., உடன்பிறப்புகள் மத்தியில், எரிச்சலை ஏற்படுத்தியது.அப்போது கார்த்தி தன், 'டுவிட்டர்' பக்கத்தில் போட்ட பழைய பதிவு ஒன்று, தற்போது வாட்ஸ் ஆப்பில், பரவி வருகிறது. அதில், கருணாநிதி, எம்.ஜி.ஆர்., - ஜெயலலிதா, என்.டி. ராமாராவ் ஆகியோர் படங்களை போட்டு, 'என் தேசத்தில் படித்தால் வேலை தான் கிடைக்காது. ஆனால், நடித்தால் நாடே கிடைக்கும்' என்று, 'மீம்ஸ்' போட்டிருந்தார்.இது, அப்போதே பரபரப்பாக பேசப்பட்டாலும், கூட்டணி இல்லாத நிலையில், திராவிட கட்சிகளை, கார்த்தி தாக்கி பேசி வந்ததால், யாரும் கண்டுகொள்ளவில்லை.இந்நிலையில் சிலர், கார்த்தியின், 'டுவிட்டர்' பக்கத்தில் சென்று, அந்த பழைய மீம்ஸை, 'ஸ்கிரீன் ஷாட்' எடுத்து பரப்பி வருகின்றனர். இதை பார்க்கும், தி.மு.க.,வினர், என்ன தான் இருந்தாலும், கருணாநிதியின் படத்தை, அந்த, 'மீம்ஸில்' போட்டிருக்கக் கூடாது என்று ஆதங்கப்படுகின்றனர். 'தேர்தலுக்கு வேண்டுமானால் கார்த்தி, தி.மு.க., வினரை புகழ்ந்து தள்ளலாம். ஆனால், அவரிடம் எப்போதுமே, தி.மு.க.,வினருக்கான மரியாதையை எதிர்பார்க்க முடியாது' என்கின்றனர், உடன்பிறப்புகள்.


Bhaskaran - Chennai,இந்தியா
18-ஏப்-2019 09:53 Report Abuse
Bhaskaran இந்திராவை கலைஞர் பேசாத பேச்சா அதை மறைந்து மன்னித்து கூட்டணிவைத்த காங்கிரசார் உண்மையிலேயே மகாபெரியமனிதர்கள்தான்
oce - chennai,இந்தியா
15-ஏப்-2019 14:55 Report Abuse
oce சினிமாவுக்கு கதை வசனம் பாடல் எழுதுவதும் நடிப்பு போன்றது தான். அதை செய்தவரும் நடிகர் வரிசையில் வைக்கப்படவேண்டியவர்..
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
15-ஏப்-2019 13:06 Report Abuse
Malick Raja இதைப்பார்த்து ஆதகமித்திருப்பது உண்மையானால் .. பாமக, அதிமுகவுக்கு ஒரு ஒட்டு கூட கிடைக்காது இதெல்லாம் எடுபடாது .. மீம்ஸ் .பாமக அன்புமணி சொன்னது .. டயர்நக்கிகள் .. ராமதாஸோ கையாலாகாத முதல்வர் மூடன் என்றெல்லாம் சொன்னது .. ஈபிஎஸ் ஒருபடி மேலே சென்று பாமக ஊழல் கட்சி ஊழல் வழக்கில் அன்புமணி சிறை செல்வார் . இன்னும் கேவலமான வார்த்தைகள் சொன்னதெல்லாம் மக்களுக்கு தெரியும் மறக்க வாய்ப்பில்லை ஆக வேண்டாத வேலைகள் பின்னர் சிரமத்தை கொண்டுவரும் என்பது மட்டும் உறுதி
Chowkidar NandaIndia - Vadodara,இந்தியா
15-ஏப்-2019 15:46Report Abuse
Chowkidar NandaIndiaஅன்று வைகோ திமுகவை பார்த்து சொன்னது "பச்சை துரோகிகள், முதுகில் குத்தியவர்கள்". திமுக தலைவர் அன்றைய கான்க்ராஸ் தலைவர்களை பார்த்து சொன்னது "சர்வாதிகாரி, அண்டங்காக்கை". இப்படி பல பிரபலமான அனல் தெறிக்கும் வசனங்கள் உங்கள் கூட்டணி கட்சிகள் மத்தியில் நடந்து இருக்கையில் பாமக, அதிமுகவை மட்டும் விமர்சிப்பது சரியில்லையே....
Sudarsanr - Muscat,ஓமன்
16-ஏப்-2019 19:14Report Abuse
Sudarsanrஅவர் அவர் தலையை போல வசதியாக அவருக்கு வேண்டாததை விட்டுவிடுவார் அல்லது மறந்துவிடுவார்...
Yaro Oruvan - DUBAI,ஐக்கிய அரபு நாடுகள்
14-ஏப்-2019 12:11 Report Abuse
Yaro Oruvan இதை பார்க்கும், தி.மு.க.,வினர், என்ன தான் இருந்தாலும், கருணாநிதியின் படத்தை, அந்த, 'மீம்ஸில்' போட்டிருக்கக் கூடாது என்று ஆதங்கப் படுகின்றனர்.... ஹா ஹா லிஸ்ட்ல மொத படம் அதாவது A1 நம்ம தலதான்...
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)