ராஜஸ்தான் - காதைக் கொண்டாங்க....

சி.எம்., மகனுக்கு கார் இல்லை;பாவம் அவர் ரொம்ப ஏழை!

வேட்பு மனு தாக்கலில், பல சுவாரசியமான தகவல்கள் தெரிய வந்துள்ளன. ராஜஸ்தான் முதல்வர், அசோக் கெலாட்டின் மகன், வைபவ் கெலாட், காங்., சார்பில், ராஜஸ்தானின் ஜோத்பூரில் போட்டி யிடுகிறார். அவர் சொத்து மதிப்பு, 96 லட்சம் ரூபாய்; சொந்தமாக கார் உள்பட எந்த வாகனமும் இல்லை.அவரின் அப்பா, காங்கிரஸ் முதுபெரும் தலைவர்களில் ஒருவராக இருந்த போதும், சம்பாதிப்பது எப்படி என்ற கலையை, கட்சியின் பிற தலைவர்களிடம் கற்காமல் விட்டு விட்டார்.அதே நேரம், பா.ஜ.,வைச் சேர்ந்த, முன்னாள் முதல்வர், வசுந்தரா ராஜேயின் மகன், துஷ்யந்த் சிங், ஐந்து வாகனங்கள் வைத்துள்ளதாக, வேட்பு மனுவில் கூறியுள்ளார்; சொத்து, பல கோடியை தாண்டுகிறது.ஆஜ்மீரில், காங்., சார்பில் போட்டியிடும், தொழிலதிபர், ரிஜு ஜுன்ஜுன்வாலா தான், மாநிலத்தில் பணக்கார வேட்பாளர். முன்னாள் அமைச்சர், பீனா காக்கின் மருமகனான இவருக்கு, 80 கோடி ரூபாய் சொத்து உள்ளது. அதே நேரத்தில், பார்மரில் போட்டியிடும், பா.ஜ., வேட்பாளர் கைலாஷ் சவுத்ரி, ரொம்ப ஏழை.அவர், 12 லட்சம் ரூபாய்க்கு மட்டுமே சொத்து வைத்துள்ளார். ஜெய்ப்பூர் அரச குடும்பத்தைச் சேர்ந்த, பா.ஜ., சார்பில், ராஜ்சமந்த் தொகுதியில் போட்டியிடும், திவ்ய குமாரிக்கு, 16.49 கோடி ரூபாய் சொத்து உள்ளது. இவர், இரண்டாவது பணக்கார வேட்பாளர். அரச குடும்பத்தை சேர்ந்தவர் இல்லையா!

நடிகர் பிரசாரம்!
அனைத்துக் கட்சிகளிலும், சினிமா நட்சத்திரங்கள் இருப்பர்; கட்சி வேட்பாளர்களுக்காக பிரசாரம் செய்வர். ஆனால், ராஜஸ்தானில், ஒரு வேட்பாளருக்காக மட்டும், பிரபல பாலிவுட் நடிகர், சல்மான் கான் உள்ளிட்டோர் பிரசாரம் செய்ய உள்ளனர்.ஆஜ்மீர் தொகுதியில், காங்கிரஸ் சார்பில் போட்டியிடுகிறார், தொழிலதிபர் ரிஜு ஜுன்ஜுன்வாலா. இவரின் மாமியார், பீனா காக், மாநிலத்தின் முன்னாள் அமைச்சர். முன்னாள் நடிகையான இவர், பல ஹிந்தி படங்களில் நடித்து உள்ளார். அந்த நட்பின் அடிப்படையில், பிரபல பாலிவுட் நடிகர், சல்மான் கான், நடிகை, கத்ரீனா கைப் உள்ளிட்டோர் பிரசாரம் செய்ய வருவதாக கூறியுள்ளனர்.

தெருக் கூத்து பிரசாரம்!

தேர்தலில் ஓட்டு அளிப்பது தொடர்பாக விழிப்புணர்வு பிரசாரங்கள் நடக்கின்றன. அனைவரும் ஓட்டளிக்கும் வகையில், தேர்தல் நாளில் சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும் என, தேர்தல் கமிஷன் கூறியுள்ளது. ஆனால், கூலித் தொழிலாளர்களுக்கு யார் விடுமுறை கொடுப்பர்...இது தொடர்பாக, தொழிலாளர்களுக்கும், நிறுவனங்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்த, தெருக்கூத்துகள், நாட்டுப்புற கலைகள் மூலம், ராஜஸ்தானில் பிரசாரம் நடக்கிறது.மேலும், மின்னணு ஓட்டுப் பதிவு இயந்திரத்தில் எப்படி ஓட்டளிக்க வேண்டும் என்ற பயிற்சியும் அளிக்கப்படுகிறது. - ஆபா சர்மா -சிறப்பு செய்தியாளர்வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)