ஸ்டாலினுக்கு பயம் பா.ம.க., பெருமிதம்

ராமதாஸ், அன்புமணி இருவர் மீதும், ஸ்டாலினுக்கு பயம் இருப்பதாக, பா.ம.க., நிர்வாகிகள் பிரசாரம் செய்து வருகின்றனர்.அ.தி.மு.க., கூட்டணியில் இடம் பெற்றுள்ள, பா.ம.க., ஏழு லோக்சபா தொகுதிகளில் போட்டியிடுகிறது. ஆறு தொகுதிகளில், தி.மு.க., வேட்பாளர்களை, நேரடியாக எதிர்கொள்கிறது. வியூகம்இந்த தொகுதிகளில், பா.ம.க.,வை வீழ்த்த வேண்டும் என்பதில், தி.மு.க., தலைவர், ஸ்டாலின் உறுதியாக உள்ளார். இதற்காக பல்வேறு வியூகங்களை வகுத்து வருகிறார். தேர்தல் பிரசாரத்திற்கு செல்லும் இடங்களில் எல்லாம், பா.ம.க., நிறுவனர், ராமதாஸ், அக்கட்சியின் இளைஞரணி தலைவர், அன்புமணி இருவரையும், ஸ்டாலின் கடுமையாக விமர்சிக்கிறார்.

இருவரது பெயர்களை குறிப்பிடாமல், 'அய்யா, சின்ன அய்யா' என, பா.ம.க.,வினர் அழைப்பது போலவே, ஸ்டாலினும் அழைக்கிறார்.ராமதாசை குறிப்பிடும் போது, கருணாநிதியும், 'மருத்துவர் அய்யா...' என்று தான் மரியாதையுடன் அழைப்பார். அதேபோல, ஸ்டாலினும் அழைத்து வருகிறார்.'முதல்வரை, 'மண்புழு, விஷப்புழு, விஷவாயு' என, பல புனைப் பெயர்களை கூறி கிண்டல் அடித்தாலும், ராமதாஸ் மற்றும் அன்புமணி மீதுள்ள பயம் காரணமாகவே, இருவரையும் ஸ்டாலின் மரியாதையுடன் குறிப்பிட்டு வருகிறார்' என, பா.ம.கா.,வினர் பிரசாரம் செய்து வருகின்றனர்.

திணறல்வார்த்தைகளை கொட்டிவிட்டால், அடுத்தடுத்த தேர்தல்களில் கூட்டணி அமைக்கும் போது, நெருடல் ஏற்படும் என்பதால், ஸ்டாலின், இந்த நடவடிக்கையை பின்பற்றுவதாக, பா.ம.க.,வினர் கூறி வருகின்றனர். இதற்கு பதிலடி கொடுக்க முடியாமல், தி.மு.க.,வினர் திணறி வருகின்றனர்.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)