கோட்டை விட்ட உளவுத்துறை விமர்சனத்தில் சிக்கிய முதல்வர்

உளவுத்துறையினர் கோட்டை விட்டதால், தேனி மாவட்டத்திற்கு பிரசாரத்திற்கு வந்த முதல்வர், 'கான்வாய்' குறித்து எதிர்மறையான விமர்சனங்கள் எழுந்துள்ளன.கடந்தாண்டு, தேனி மாவட்டம், சுருளி அருவியில் நடந்த சாரல் விழாவில், துணை முதல்வர் பன்னீர் செல்வம், வனத்துறை அமைச்சர் சீனிவாசன் பங்கேற்றனர். நிகழ்ச்சி முடிந்து செல்லும் போது அமைச்சர்களை, டி.என்.டி., சான்றிதழ் கேட்டு போராடும் சீர்மரபினர் முற்றுகையிட்டனர்.


அதிகாரிகளின் சமரசத்திற்கு பின், முற்றுகை கை விடப்பட்டது. 'எங்கள் கோரிக்கை நிறைவேற்றப்படா விட்டால், தேனி மாவட்டத்தில் நடைபெறும் விழாக்களில், பங்கேற்க வரும் அமைச்சர்களை முற்றுகையிடுவோம்' என, எச்சரித்தனர்.கடந்த வாரம், தேனி மாவட்டம், கூடலுாரில், அ.தி.மு.க., வேட்பாளர் ரவீந்திரநாத் குமாருக்கு ஆதரவாக, முதல்வர், இ.பி.எஸ்., வேனில் பிரசாரம் செய்த போது, இக்குழுவினர் முற்றுகையிட்டு, கோஷம் எழுப்பியதால், சலசலப்பு ஏற்பட்டது. அவர்களின் கோரிக்கையை மனுவாக பெற்ற முதல்வர், பிரச்னையை சமாளித்தார்.முற்றுகைக்கு, 15 பேர் கூடியுள்ள தகவலை சேகரிக்காமல், உளவுத்துறை கோட்டை விட்டதால், முதல்வரின், 'கான்வாய்' முற்றுகை, மாநில அளவில் எதிரொலித்தது.இதேபோல, உத்தமபாளையத்தில், முதல்வரின் வருகையையொட்டி, பாதுகாப்பு காரணங்களுக்காக ஆற்றுப் பாலத்திலிருந்து தேர் முக்கு வரை ஆட்கள், வாகனங்கள் நிற்க தடை விதிக்கப்பட்டது.


வெறிச்சோடிய இந்த ரோட்டில், பிரசார வாகனத்தில் முதல்வர் கும்பிட்டவாறு வந்ததை, புகைப்படம் எடுத்து, 'ஆளில்லாத கடையில், டீ ஆத்துகிறார் முதல்வர்' என, சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டது.'அப்பகுதியில், மாடியில் இருந்து துல்லியமாக புகைப்படம் எடுக்க, போலீசார் எவ்வாறு அனுமதித்தனர்' என்ற, கேள்வி எழுந்துள்ளது. போலீஸ் கண்காணிப்பு குறைபாட்டால், முதல்வர், 'கான்வாய்' தவறாக வழிநடத்தப்பட்டதாக, அ.தி.மு.க.,வினர் புலம்புகின்றனர்.வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)