தேர்தல் ஆணையம் மீது சந்திரபாபு புகார்

புதுடில்லி: தேர்தல் ஆணையம் பிரதமர் அறிவுரைப்படி செயல்படுகிறது என ஆந்திர முதல்வர் சந்திரபாபு புகார் கூறியுள்ளார்.

நாடு முழுவதும் நேற்று முன்தினம் (ஏப்.11) அன்று முதல்கட்ட லோக்சபா தேர்தல் நடந்தது. இதில் ஆந்திராவில் மொத்தம் உள்ள 25 லோக்சபா தொகுதிகளுக்கும், சட்டசபைக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடந்தது.

இதில், 66 சதவீத ஓட்டுகள் பதிவாகியது. 2014ம் ஆண்டு நடந்த தேர்தலில் 78.8 சதவீத ஓட்டுகள் பதிவாகியிருந்தது. தேர்தல் அன்று 30 முதல் 40 சதவீத மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் சரியாக செயல்படவில்லை என புகார் கூறப்பட்டது. 150 ஓட்டுச்சாவடிகளில் மறு தேர்தல் நடத்த வேண்டும் என ஆந்திர முதல்வர் சந்திரபாபு தேர்தல் ஆணையத்திற்கு கோரிக்கை விடுத்திருந்தார். தேர்தல் நடத்தாவிட்டால், தேர்தல் ஆணையம் முன் போராட்டம் நடத்துவேன் எனக்கூறியிருந்தார்.


இந்நிலையில், டில்லியில் தெலுங்கு தேசம் கட்சியின் முக்கிய நிர்வாகிகளுடன் இணைந்து தலைமை தேர்தல் ஆணையரை முதல்வர் சந்திரபாபு சந்தித்து பேசினார். அப்போது மீண்டும் ஓட்டுச்சீட்டு முறையில் தேர்தல் நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.


பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைகளில் மத்திய அரசு தலையிடுகிறது. மின்னணு ஓட்டுப்பதிவு எந்திரங்கள் மீது ஏற்கனவே புகார் கூறியிருந்தோம். தேர்தல் ஆணையம் சுதந்திரமான அமைப்பு. ஆனால், பிரதமர் மோடியின் அறிவுரைப்படி செயலாற்றுகிறது. எங்களுடன் தேர்தல் ஆணையம் ஒத்துழைக்கவில்லை. ஆந்திராவில் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டது அநீதி. இவ்வாறு சந்திரபாபு கூறினார்.வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)