ஓட்டுக்கு ரூ. 1,000

மதுரை : ''தமிழகத்தில் ஆளுங்கட்சியினர் ஒரு ஓட்டுக்கு 1,000 ரூபாய் வரை தருகின்றனர். தடுக்க வேண்டிய பறக்கும்படை, போலீசார் மவுனம் காக்கின்றனர்,'' என மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் புகார் கூறினார்.மதுரையில் அவர் கூறியதாவது:இடைதேர்தல் நடத்த உச்சநீதிமன்றம் சென்று தி.மு.க., வழக்கு தொடுத்த பின் நான்கு தொகுதிகளுக்கு தற்போது தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இது தேர்தல் கமிஷனுக்கு வீண் செலவு. தேர்தல் கமிஷன் கையாலாகாத கமிஷனாக இருக்கிறது.
தி.மு.க., விற்கு நான்கு தொகுதிகளிலும் எங்களின் ஆதரவு உண்டு.40 லோக்சபா தொகுதிகளில் வெற்றியை முடக்கும் வகையில் ஆளுங்கட்சியினர் பறக்கும் படை, வருமான வரித்துறையை ஏவி எதிர்கட்சியினரின் வீட்டில் சோதனை நடத்தி வருகிறார்கள். தேர்தல் விதிமீறலில் ஈடுபடுட்டவர்களை கைது செய்ய வேண்டும். மதுரை நுண்ணறிவு போலீஸ் உதவி கமிஷனர் சிவக்குமார் பல ஆண்டுகளாக ஒரே இடத்தில் வேலை பார்க்கிறார்.
அவரை இடமாற்றம் செய்யவேண்டும்.அவருடைய வாகனத்தில் கூட பணம் கடத்துவதாக தகவல் வருகிறது. தமிழகத்தில் ஓட்டுக்கு 1,000 ரூபாய் வழங்கபடுவதாக புகார் வருகிறது. பறக்கும்படை, போலீசார் மவுனமாக உள்ளனர். பணம் கொடுத்தாலும் 40 லோக்சபா, 22 சட்டசபை தொகுதிகளில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வெற்றி பெறும், என்றார்.வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)