அன்புமணியின் அழுகை வீடியோ

பா.ம.க., இளைஞரணி தலைவர் அன்புமணி, அழுது, ஓட்டு கேட்கும் வீடியோவை, அக்கட்சியினர், வன்னியர் சமூக பெண்களிடம் காட்டி, அனுதாப ஓட்டுகளை பெறும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். தமிழகத்தில், 2016 சட்ட சபை தேர்தலின் போது, பா.ம.க., முதல்வர் வேட்பாளராக, அக்கட்சியின், இளைஞரணி தலைவர் அன்புமணி அறிவிக்கப்பட்டார். அவர், இளைஞர்களை ஈர்க்கும் வகையில், புதிய பிரசார முறைகளை மேற்கொண்டார். இது, பா.ம.க.,வினரை மட்டுமின்றி, மற்ற கட்சியினரையும் கவனிக்க வைத்தது.
ஜெயலலிதா மறைவுக்கு பின், முதல்வர், இ.பி.எஸ்., துணை முதல்வர் பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்களை, அன்புமணி, கடுமையாக விமர்சித்தார். ராமதாஸ், தி.மு.க., - அ.தி.மு.க., ஆகிய இரு கட்சிகளையும் விமர்சித்தார். லோக்சபா தேர்தலுக்கு, அ.தி.மு.க., கூட்டணியில், பா.ம.க., இணைந்ததை அடுத்து, அன்புமணி, ராமதாஸ் பேசிய, வீடியோ பதிவுகளை, தி.மு.க.,வினர், சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். இன்று வரை, வீடியோ பரவி வருகிறது. இந்நிலையில், பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தபோது, அன்புமணி, வாக்காளர்களிடம் கண்ணீர் விட்டு அழுவது போன்ற, வீடியோ, சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
அதை, பா.ம.க.,வினர், வன்னிர் சமூக பெண்களிடம் காட்டி, அனுதாப ஓட்டுகளை பெறும் முயற்சியில் ஈடுபட்டு உள்ளனர்.இதுகுறித்து, பா.ம.க., நிர்வாகி ஒருவர் கூறியதாவது:பா.ம.க., மூத்த தலைவர்களை, ஜெயலலிதா கைது செய்ததால் தான், அ.தி.மு.க.,வினரை, அன்புமணி விமர்சித்தார்.இந்த தேர்தலில், வெற்றி பெற வேண்டிய கட்டாயம் உள்ளது. அவர், ஓட்டுக்காக அழவில்லை. கட்சியினரை சந்தித்த உணர்ச்சியில் அழுது விட்டார்.இவ்வாறு அவர் கூறினார்.அதேசமயம், எதிர்கட்சிகள், 'அ.தி.மு.க.,வை கடுமையாக விமர்சித்து விட்டு, அக்கட்சியுடன் கூட்டணி அமைத்ததை, வன்னியர் சமூகத்தினரே விரும்பவில்லை. தோல்வி பயத்தில், அன்புமணி அழுகிறார்' என, விமர்சனம் செய்து வருகின்றனர்.வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)