வறுமைக்கு எதிராக சர்ஜிக்கல் ஸ்டிரைக்: ராகுல்

சேலம்: வறுமை மீது சர்ஜிக்கல் தாக்குதல் நடத்த முடிவெடுத்துள்ளோம் என காங்கிரஸ் தலைவர் ராகுல் கூறியுள்ளார்.

சேலத்தில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் பேசியதாவது: கருணாநிதி சாதாரண மனிதர் அல்ல. தமிழர்களின் குரலாக இருந்தார். தமிழக அரசு கருணாநிதியை மட்டும் அவமானபடுத்தவில்லை. தமிழர்களின் குரலை அவமானபடுத்தியது. தமிழர்களையும், தமிழையும் மதிக்க வேண்டும் என்பதால் தான் திமுக கூட்டணியில் இருக்கிறோம். காங்கிரஸ் தேர்தல் அறிக்கை மூடிய அறைக்குள் தயாரிக்கவில்லை. நீட் தேர்வு தேவையா இல்லையா என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளலாம். ரூபாய் நோட்டு வாபஸ் குறித்து பிரதமர் யாரிடமாவது ஆலோசித்தாரா?

விவசாயிகளை அழைத்து ஏன் போராடுகிறீர்கள் என கேட்க பிரதமருக்கு நேரமில்லை. பிரதமர் மோடி ஏழைகளோடு அமர்ந்திருக்கும் புகைப்படத்தை பார்க்க முடியாது. வறுமைக்கு எதிராக சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்த முடிவு செய்துள்ளோம். நியாய் திட்டத்தை காங்கிரஸ் உருவாக்கியுள்ளது. இதன் மூலம் ஏழைகளின் வங்கிக்கணக்கில் ரூ.72 ஆயிரம் செலுத்தப்படும். மேக் இன் இந்தியா என மோடி வெற்று அறிவிப்பு செய்து வருகிறோர். எந்த பொருளை எடுத்தாலும், அதில் மேக் இன் சீனா என உள்ளது. எந்த அலுவலகத்திற்கு சென்றாலும் லஞ்சம் கொடுக்க வேண்டிய நிலை உள்ளது. கடந்த 5 ஆண்டுகளாக இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை மோடி வழங்கவில்லை. இவ்வாறு ராகுல் பேசினார்.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)