'ஸ்மார்ட்' ஆக வாக்களியுங்க: விஜயகாந்த் மகன் பிரசாரம்

விருதுநகர்: "வாக்காளர்கள் சிந்திந்து 'ஸ்மார்ட்' ஆக வாக்களிக்க வேண்டும்," என தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் மகன் விஜயபிரபாகரன் பேசினார்.

விருதுநகரில் தே.மு.தி.க., வேட்பாளர் அழகர்சாமியை ஆதரித்து அவர் பேசியதாவது: விருதுநகர் எனக்கு பூர்வீகம். பக்கத்து ஊரான மதுரையும் என் தந்தை விஜயகாந்தின் சொந்த ஊர். மதுரைக்காரர்களிடம் இருக்கும் ' மஸ்து' (கெத்து)என்னிடம் உள்ளது. வேட்பாளர் அழகர்சாமி மக்களோடு மக்களாக இறங்கி வேலை பார்ப்பார். மத்தியிலும்,மாநிலத்திலும் ஒரே ஆட்சி இருந்தால் தான் தமிழகத்திற்கான திட்டங்கள் எளிதாக நிறைவேறும்.இதை உணர்ந்து வாக்காளர்கள் சிந்திந்து 'ஸ்மார்ட்' ஆக வாக்களிக்க வேண்டும். விஜயகாந்தை சீண்டிய துரைமுருகன் தண்டிக்கப்பட்டுள்ளார்.

கடந்த 10 ஆண்டுகளில் ஆட்சியில் இல்லாதவர்கள் வீட்டில் எப்படி இவ்வளவு பணம் வந்தது. 2ஜியில் சம்பாதித்த பணம் எங்குள்ளது என்று மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். பா.ஜ., தேர்தல் வாக்குறுதியில் நதிநீர் இணைப்பு இடம்பெற்றுள்ளது. நதிநீர் இணைக்கப்பட்டால் நாட்டின் பாதி பிரச்னைகள் தீர்ந்துவிடும். ஏப்., 18 ல் அழகர் ஆற்றில் இறங்குகிறார். அதே நாள் நமது வேட்பாளர் அழகர்சாமி உங்கள் மனதில் இறங்குவார், என்றார்.வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)