காலை வாரும் கட்சியினர்: அதிருப்தியில் தலைமை

ராஜஸ்தானில், 25 தொகுதிகளையும், காங்கிரஸ் தலைமை குறிவைத்துள்ள நிலையில், உள்குத்து தொடர்வதால் கவலை அடைந்துள்ளது; குறிப்பிட்ட எட்டு தொகுதிகளில், வேட்பாளர்களுக்குஎதிராக, கட்சியினரே செயல்படுவதால், பீதி அடைந்துள்ளது.கடந்த, லோக்சபா தேர்தலில், ராஜஸ்தானில் உள்ள, 25 தொகுதிகளையும், பா.ஜ., வென்றது. கடந்தாண்டு இறுதியில் நடந்த சட்டசபை தேர்தலில், காங்கிரஸ் வென்றது; மூத்த தலைவர், அசோக் கெலாட், முதல்வர்ஆனார்.சட்டசபை தேர்தலின் போதே, லோக்சபாவுக்கான வேட்பாளர் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.மூன்று மாதங்களாக விவாதிக்கப்பட்டு, வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர்; மாநில நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தியே அறிவிக்கப்பட்டனர்.ஆனால், ராஜஸ்தானில், குறிப்பிட்ட சில தொகுதிகளில், கட்சி அறிவித்த வேட்பாளருக்கு எதிராக, கட்சியினரே, உள்குத்து வேலைகளில் ஈடுபடுகின்றனர்.சில தொகுதிகளில், புதிய வேட்பாளர் அறிமுகம் செய்யப்பட்டுள்ள தால், 'சீனியர்'கள் அவர்களுக்கு எதிராக செயல்படுகின்றனர் என, கட்சித் தலைமைக்கு தெரிய வந்துஉள்ளது.அதையடுத்து, முதல்வர், அசோக் கெலாட், துணை முதல்வர், சச்சின் பைலட், கட்சியின் பொதுச் செயலர், அவினாஷ் பாண்டே உள்ளிட்டோரை அழைத்து, கட்சித் தலைவர், ராகுல், விவாதித்துஉள்ளார். ராஜஸ்தானில், வரும், 29 மற்றும் மே, 6ல் தேர்தல் நடக்க உள்ளது.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)