வீண் பழி சுமத்துறாங்க: முலாயம் சிங்

புதுடில்லி : சொத்துக் குவிப்பு வழக்கு தொடர்பாக, உச்ச நீதிமன்றத்தில், சமாஜ்வாதி தலைவர், முலாயம் சிங் யாதவ், பதில் மனு தாக்கல் செய்துள்ளார். அதில், தங்கள் குடும்பத்தின் மீது வீண் பழி சுமத்தப்பட்டுள்ளதாக, அவர் தெரிவித்து உள்ளார்.உச்ச நீதிமன்றத்தில், காங்.,கை சேர்ந்த விஸ்வநாத் சதுர்வேதி என்பவர், 2005ல், தாக்கல் செய்த மனுவில், 'சமாஜ்வாதி தலைவர்கள், முலாயம் சிங், அகிலேஷ் மற்றும் அவர்களது குடும்பத்தினர், வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்து உள்ளனர். 'இது குறித்து, சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்' என, தெரிவித்திருந்தார்.'முலாயம் மீதான இந்த குற்றச்சாட்டு உண்மையா என விசாரித்து, அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்' என, சி.பி.ஐ.க்கு, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
ஆனால், சி.பி.ஐ., தரப்பில், எந்த அறிக்கையும் தாக்கல் செய்யப்படவில்லை.இதையடுத்து, சதுர்வேதி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், முலாயம் மீதான சொத்து குவிப்பு புகாரில், 'முதல் தகவல் அறிக்கை கூட, சி.பி.ஐ., தரப்பில் பதிவு செய்யப்படவில்லை' என, கூறியிருந்தார்.இந்த மனுவை விசாரணைக்கு ஏற்ற உச்ச நீதிமன்றம், 'முலாயம் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எதிரான வழக்கில், இரண்டு வாரங்களுக்குள் விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும்' என, சி.பி.ஐ.,க்கு, சமீபத்தில் உத்தரவிட்டது.
இந்நிலையில், உச்ச நீதிமன்றத்தில், சமாஜ்வாதி தலைவர் முலாயம் சிங் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் கூறப்பட்டுள்ள தாவது:வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்துள்ளதாக, என் மீதும், என் மகன்கள் அகிலேஷ், பிரதீக் மற்றும் குடும்பத்தினர் மீதும், வீண் பழி சுமத்தப்பட்டுள்ளது.
சி.பி.ஐ., நடத்திய முதல் கட்ட விசாரணையில், நாங்கள் வருமானத்துக்கு அதிகமான சொத்து குவித்துள்ளதற்கான எந்த ஆதாரமும் இல்லை என, தெரிவிக்கப்பட்டுள்ளது; அதனால், இந்த வழக்கை, தள்ளுபடி செய்ய வேண்டும்.இவ்வாறு, அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.இந்த மனு மீது, இன்று விசாரணை நடக்கும் என, எதிர்பார்க்கப் படுகிறது.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)