ஸ்டாலினுக்கு மதச்சிக்கல்: தி.மு.க.,வை சுழற்றி அடிக்கும் புது புயல்

சென்னை: இதுவரை எந்த தேர்தலிலும் காணாத அளவுக்கு இந்த முறை, தமிழக தேர்தல் களத்தில் ஆதிக்கம் செலுத்துகிறது மதம்.


மதத்தால் மனிதர்களை பிரித்து, ஓட்டுகளை கைப்பற்ற கட்சிகள் முயற்சி செய்வது, நாட்டுக்கே ஆபத்தில் முடியும் என, சமூக சிந்தனையாளர்கள் கவலை கொண்டுள்ளனர். என்றாலும், மதம் பிடிக்கும் அளவுக்கு, பல தலைவர்கள் மதத்தை நம்புகிற நிலை தான், பரவலாக காணப்படுகிறது. இதில் வேடிக்கை என்ன என்றால், மதங்களை நம்பாத பகுத்தறிவு வாதிகளாக தங்களை முன்னிலைப் படுத்துபவர்களே, இந்த சூழ்நிலையை உருவாக்கியது தான். பா. ஜ., ஒரு இந்து கட்சியாக பார்க்கப்படுவதால், சிறுபான்மை மதத்தினரின் ஓட்டுகள் அக்கட்சிக்கு குறைவாக கிடைக்கிறது. அதே சமயம், இந்துக்கள் எந்த தேர்தலிலும் ஒட்டுமொத்தமாக, ஒரு கட்சிக்கு சாதகமாக அல்லது எதிராக ஓட்டு போடுவது இல்லை. இதனால், பா.ஜ., அல்லாத கட்சிகள் இந்து ஓட்டுகள் குறித்து அலட்டிக் கொண்டது இல்லை. இந்த தேர்தல் அந்த சூழலை மாற்றி இருக்கிறது.கருணாநிதி மறைவுக்கு பிறகு, தி.மு.க.,வின் தலைவரான ஸ்டாலின், திட்டமிட்டோ அல்லது எதேச்சையாகவோ அடிக்கடி, இந்து மதத்தை மட்டம் தட்டி பேசி வருகிறார். செயலிலும் அந்த வெறுப்பை வெளிக்காட்டுகிறார். முஸ்லிம்களின் திருமண நிகழ்ச்சிக்கு போனால்கூட, இந்து மத சடங்குகளை கேலி செய்து பேசும் அளவுக்கு, இந்து விரோத எண்ணங்கள் அவரது மனதில் நிறைந்திருக்கின்றன. மற்ற மதச் சின்னங்களை சரளமாக அணிந்து கொள்ளும் ஸ்டாலினால், இந்து கோவிலின் அர்ச்சகர்கள் தீட்டிய நாமத்தை சில நிமிடங்கள்கூட, நெற்றியில் விட்டுவைக்க பொறுமை இல்லை. தொடர்ந்து நடைபெற்று வரும் இத்தகைய இந்து விரோத நிகழ்வுகள், இதுவரை பெரும்பாலும், பிராமணர்களால் மட்டுமே கண்டிக்கப்பட்டன. ஆண்டாள் மீதான வைரமுத்துவின் அவதுாறு, கிருஷ்ணர் மீதான, வீரமணியின் கேவலமான பேச்சு போன்றவை, பிராமணர் அல்லாத இந்துக்களிடமும் தாக்கத்தை ஏற்படுத்தியது.


இந்துத்வா என்ற பெயரில் அரசியல் செய்யும், பா. ஜ., மீதும் அதன் தலைவர்கள் மீதும் ஆத்திரம் வந்தால், அந்தக் கட்சியோடும், அதன் தலைவர்களோடும் சண்டை போடுவதில் அர்த்தம் இருக்கிறது. அதை விடுத்து, எந்த வம்பு தும்புக்கும் போகாமல் தானுண்டு தன் வேலையுண்டு என வாழ்ந்து கொண்டிருக்கும் கோடிக்கணக்கான இந்துக்களின் மனதை காயப்படுத்தும் வகையில், இந்து மதத்தையும் கடவுளையும், சடங்குகளையும் அசிங்கமாக கேலி செய்வது முறையா என அவர்கள் கேட்கின்றனர்.


சமூக வலைதளங்களில் முழு நேரத்தையும் செலவிடும் அறிவுஜீவிகள், 'இந்துக்கள் வேறு; தமிழர்கள் வேறு' என்ற விஷக்கருத்தையும் திட்டமிட்டு விதைக்கின்றனர். இந்த செயல்கள் ஜாதிகளைத் தாண்டி ஒவ்வொரு இந்துவின் வீட்டிலும் இன்று விவாதப் பொருளாக மாறியிருக்கிறது. குறிப்பாக, தினமும் வீட்டிலோ, கோவிலிலோ சாமி கும்பிடத் தவறாத பெண்கள், இந்த விஷயத்தை எப்போதும் இல்லாத அக்கறையுடன் விவாதிக்கின்றனர். 'ஏட்டிக்கு போட்டியாக எதுவும் சொல்லாமல், செய்யாமல் விடுவதால் தான், ஸ்டாலினுக்கும் அவரை வழிநடத்துபவர்களுக்கும் குளிர்விட்டு போய்விட்டது. குறைந்தபட்சம், நமது வலியை அவருக்கு உணர்த்தும் வகையில், இந்த தேர்தலில், தி.மு.க., வேட்பாளர்களுக்கு ஓட்டு போடக்கூடாது என்ற நிலைப்பாடு எடுப்போம்' என, இந்துக்கள் முடிவு எடுத்து வருகின்றனர்.

'தி.மு.க.,வுக்கு பாடம் புகட்ட, பா.ஜ.,வுக்கும், அதன் கூட்டணிக் கட்சிகளுக்கும் ஓட்டு போடுவோம்' என்று சிலர் தொடங்கிய பிரசாரம், பெரிய விளைவை ஏற்படுத்த முடியவில்லை. அதனால், அதையே சற்று மாற்றி, 'தி.மு.க.,வை தவிர யாருக்கு வேண்டுமானாலும் ஓட்டு போடுங்கள்' என்று கூறத் தொடங்கியுள்ளனர். வீரமணியின் பேச்சை, ஸ்டாலின் மனப்பூர்வமாகவும் தெளிவாகவும் கண்டிக்க மறுத்த பின், இந்த பிரசாரம் சூடு பிடித்திருக்கிறது. யார் சொன்னதையோ கேட்டு முதல்வர் மீது கொலைக்குற்றம் சாட்டத் தெரிந்த ஸ்டாலினுக்கு, உள்ளங்கை நெல்லிக்கனியாக கிருஷ்ணரை, வீரமணி அவதுாறாக பேசியது புரியவில்லையா என பலரும் ஆவேசமாக கேட்கின்றனர்.

ஊர் ஊராக இந்துக்கள் ஒன்றுகூடி, தி.மு.க.,வுக்கு ஓட்டு போட மாட்டோம் என்று கற்பூரம் ஏற்றி சத்தியம் செய்யும் நிகழ்ச்சிகள் நடந்து வருகின்றன. தேர்தலுக்குள் இதன் வேகமும், தாக்கமும் அதிகமாகும் என்பது தெரிகிறது. நிலைமை சீரியசாகி வருவதால், தி.மு.க., மேலிடத்தில் மிரட்சி தோன்றியுள்ளது. 'இந்துக்களுக்கு நாங்கள் விரோதி அல்ல. என் மனைவி கோவில்களுக்கு செல்கிறார். அதை நான் தடுத்ததே இல்லை' என, பிரசார மேடைகளில், ஸ்டாலின் விளக்கம் கொடுக்க ஆரம்பித்துள்ளார்.

துாத்துக்குடி தொகுதியில் போட்டியிடும் அவரது தங்கை கனிமொழி, 'திருச்செந்துார் முருகன் அருளால் வெற்றி பெறுவேன்' என, பேசுகிறார். தி.மு.க.,வுக்கு எதிராக, இந்துக்களை ஒருங்கிணைக்கும் பணியில் ஈடுபட்டிருக்கும், அகோபில மடம் சார்பில் நடத்தப்படும், 'நரசிம்மப்ரியா' என்ற ஆன்மிக பத்திரிகையின் ஆசிரியர் அனந்த பத்மனாபாச்சாரியாருடன் பேசினோம்.“இந்து மத சடங்குகளையும், நம்பிக்கைகளையும் கொச்சைப்படுத்துவது, 'இந்து என்றால் திருடன்' என, விளக்கம் கூறுவது, ஆண்டாளை கொச்சைப்படுத்தி பேசுவது, கிருஷ்ணரை அவதூறாக பேசுவது, நெற்றியில் விபூதி, குங்குமம் இட்டவர்களை கேலி பேசுவது, கோவிலில் திருநீறு பூசினால் அதை அழிப்பது என, ஸ்டாலினும் அவரது அடிப்பொடிகளும், இந்துக்களுக்கு எதிராக தொடர்ந்து செயல்படுகின்றனர்.''பொறுமைக்கும் எல்லை உண்டு அல்லவா? இந்துக்கள் இப்போது பொங்கி எழுகின்றனர். இந்த தேர்தலில், யாருக்கு ஓட்டுப் போட வேண்டும் என்பதை விட, யாருக்கு ஓட்டு போட கூடாது என்பதை இந்துக்களிடம் எடுத்துச் சொல்ல, தீவிரமான முயற்சிகள் எடுத்து வருகிறோம். தி.மு.க.,வை எதிர்ப்பதால், வேறு ஏதாவது கட்சிக்கு ஆதரவாக செயல்படுகிறோம் என்று அர்த்தம் இல்லை. ஏனென்றால், எந்தக் கட்சிக்கு ஓட்டு போட வேண்டும் என்று நாங்கள் சொல்லவில்லை.''என்ன பேசினாலும், அந்த பொருளில் பேசவில்லை என்று கடைசி நேரத்தில், ஒரு விளக்கம் கொடுத்து விட்டால், இந்துக்கள் அதை நம்பி நமக்கு ஓட்டு போடுவார்கள் என்ற எண்ணம் கருணாநிதிக்கு இருந்தது. அதை, அவர் பல தேர்தல்களில் பயன்படுத்தி விட்டார். ஸ்டாலினால் அந்த அளவுக்கு சிந்திக்க தெரியவில்லை. ஒரு கண்டன அறிக்கையைக்கூட, மக்கள் நம்பும் வகையில் எழுதிக் கொடுக்க அவரிடம் ஆட்கள் இல்லை.''இனியும், இளிச்ச வாயர்களாக இருந்து ஏமாற, இந்துக்கள் தயாராக இல்லை. தேர்தல் முடிவுகள் வரும் போது, எங்கள் முயற்சியின் சக்தி உலகத்துக்கு தெரியும்,” என்றார் ஆச்சாரியார்.

மன்னார்குடி செண்டலங்கார சம்பத்குமார் ஜீயர், தி.மு.க., தலைவரை கெடுப்பதே வீரமணி தான் என்று நம்புகிறார்.“கடவுளை நாங்கள் நம்புகிறோம். கும்பிடுகிறோம். சிலர் கடவுள் இல்லை என்கின்றனர். அவர்களை நாங்கள் எதிர்க்கவில்லை; விமர்சனம் செய்யவில்லை; கேலி, கிண்டல் செய்யவில்லை. அப்படி இருந்தும், எங்களை ஏன் வம்புக்கு இழுக்கிறார்கள்? இதுவரை பொறுமையாக இருந்தோம். ஆனால், அவர்கள் இதை எங்கள் பலவீனமாக நினைக்கின்றனர். ஆகவே தான், கேலி, கிண்டலை நிறுத்தவில்லை. சரி, இனியும் அமைதி வேண்டாம். குறைந்த பட்சம், தேர்தலிலாவது பாடம் புகட்டுவோம் என்றுதான், இந்த முடிவுக்கு வந்தோம்,” என்கிறார் அவர்.

தி.மு.க., அமைப்புச் செயலர் ஆர்.எஸ்.பாரதிக்கு இப்படி, ஒரு இயக்கம் நடப்பதாகவே தெரியவில்லை.“தேர்தல் களம், தி.மு.க.,வுக்கு சாதகமாக இருக்கிறது என்றவுடன், பயந்து நடுங்கி, எதிர் தரப்பினர் செய்யும் பொய் பிரசாரம் இது. இப்படித்தான், 1971ல், தி.மு.க.வுக்கு எதிராக மதத்தின் பெயரால் தீவிர பிரசாரம் செய்தார்கள். என்ன ஆனது? தி.மு.க., அமோக வெற்றி பெற்று, 184 தொகுதிகளை பிடித்து ஆட்சிக்கு வந்தது. இப்போதும் அப்படிதான் நடக்கும்,” என்கிறார் பாரதி. இந்துக்கள், ஒரே மாதிரி ஓட்டு போடுவார்களா என்பது மே, 23ம் தேதி தெரியும்.
-வி


Swaminathan Chandramouli - Pondicherry,இந்தியா
17-ஏப்-2019 22:22 Report Abuse
Swaminathan Chandramouli எல்லா இந்துக்களும் ஒன்றாகி நமது எதிர்ப்பை காட்டினால் தான் இந்த தீய சக்தி முட்டாள் கழகத்தை முறியடிக்கமுடியும். இவர்கள் எறியும் சில்லறை காசுகளுக்கு ஆசை படக்கூடாது. நாம் பதிலடியை கொடுத்தே ஆக வேண்டும்.
Sitaramen Varadarajan - chennai,இந்தியா
17-ஏப்-2019 09:46 Report Abuse
Sitaramen Varadarajan கட்டுமரம் எழுதிய வசனத்தையே மாற்றி கூற துவங்குவோம்....."பொறுத்தது போதும் ஹிந்துவே....பொங்கி எழு".... வாக்குகள் சாதிக்காததை .......வெறி கொண்ட எவனும் சாதிக்க முடியாது. ஹிந்துக்களே..... " பொறுத்தது எல்லாம் நின்று கொல்லத்தான்.. 18-04-19 அன்று ஸ்ரீ கிருஷ்ணன் அனைத்து ஹிந்துக்களின் கைகளில் நாராயணாஸ்திரம் வழங்குகிறான். அன்று இந்த துரோகிகளுக்கு சாவு மணி அடிப்போம். முடி சூடா மன்னன் மோதி அவர்களை மீண்டும் பாரத காவலனாக ஆக்குவோம். முடியட்டும் ஒழியட்டும் கான் கிராஸ் தேச துரோகிகளின் ஹிந்து துரோகிகளின் சகாப்தம்
Poongavoor Raghupathy - MUMBAI,இந்தியா
16-ஏப்-2019 16:13 Report Abuse
Poongavoor Raghupathy Stalin with the association of DK Viramani seems to have started digging a grave for DMK. The election results will confirm this. Stalin's leadership is not as shrewed as his father Kalaignar because Kalaignar used to take U-Turns very fast depending on his family gains. DK Viramani has become a dead weight for DMK and Stalin carrying him for more problems. Tamilnadu people have become wiser it seems due to continuous problems of Liquor drunkards and scarcity of water. The election results will tell us how far Tamilnadu people have become more sensible.
E.V. SRENIVASAN - Muscat,ஓமன்
16-ஏப்-2019 14:41 Report Abuse
E.V. SRENIVASAN ஒரு சில பேர்கள் விழித்துக்கொண்டு விட்டனர். ஆனால் இன்னமும் பணத்திற்காக ஓடும் கயவர்கள் இருக்கும்வரை இந்த மாதிரியான காட்சிகளை அரசியல் வியாதிகளை ஒன்றும் செய்ய முடியாது.
Sowmya Sundararajan - Clementi,சிங்கப்பூர்
16-ஏப்-2019 13:18 Report Abuse
Sowmya Sundararajan இந்த முறை இவ்வளவு அதிகமாக மதத்தை பற்றி பேச்சு வருவதற்கு காரணமே இத்தனை வருடமாக இந்துக்கள் பேசாமல் இருந்தது தான். எந்த ஒரு நாட்டிலும் அவர்கள் மதத்துக்கு முதலில் முக்கியத்துவம் கொடுத்த பின்புதான் மற்ற மதத்தை பற்றி பேசுவர் அல்லது முன்னிறுத்துவர். இந்தியாவில் மட்டும் தான் சிறுபான்மையினரை தலையில் தூக்கி வைத்து கொண்டாடி உள்ளூர்காரனின் மதத்தை அவர் பழக்கத்தை மத சின்னத்தை அவமான படுத்துவார்கள். இதை காலம் காலமாக சகித்து கொண்டு வந்தோம். இப்போது அவர்களுக்கு எதிராக நாம் குரல் கொடுக்கும் போது அது அவர்களால் தாங்கி கொள்ள முடியவில்லை.
palani kuppuswamy - sanjose,யூ.எஸ்.ஏ
16-ஏப்-2019 10:07 Report Abuse
palani kuppuswamy திருடன் கொஞ்ச நாளுக்கு கொஞ்சம் பேரை ஏமாத்தலாம் ஆனால் எல்லாரும் எல்லா காலமும் ஏமாற்ற முடியாது திமுக வின் " இந்து ஏமற்ற வேஷம்" கலைச்சி போச்சி. இனியும் இந்துக்களை ஏமாற்ற முடியாது . வெட்கம் கேட்ட திராவிஷ கட்சி இந்துக்களின் ஒட்டு வேண்டாம் என்று அறிக்கை விடுங்கள்.
Kannan - Chennai,இந்தியா
15-ஏப்-2019 19:24 Report Abuse
Kannan தி மு க மற்றும் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் இந்து விரோத கட்சிகள். ரம்சானுக்கு கஞ்சி குடிப்பது, கிறிஸ்தவர்களுக்கு ஆதரவாக இருப்பது அவர்கள் வோட்டுக்காக இந்துக்களை கொசைபடுதுவது இவர்களுக்கு வாடிக்கை. இந்த தீய சக்திகள் அழிக்க படவேண்டும்.
ganapati sb - coimbatore,இந்தியா
15-ஏப்-2019 16:35 Report Abuse
ganapati sb ரம்ஜானுக்கு குல்லா போட்டு கஞ்சி குடித்து க்ரிஷம்ஸுக்கு சிலுவை போட்டு கேக் தின்று இந்துமதத்தை மட்டும் அவதூறு செய்யும் திமுகவினருக்கும் திகவினரும் நாத்திகர்கள் இல்லை அபரஹாமியருக்கு மதம் மாற்ற உதவ வரும் அந்நிய நாடு பணத்தை தனது சுரண்டல் ஊழல் பணத்தை ஹவாலா முறையில் அவர்கள் மூலம் வெளிநாட்டில் முதலீடு செய்யும் உள்நாட்டில் நிலா ஆக்ரமிப்பு செய்யும் நாதாரிகள் இவர்கள் தோற்கடிக்கப்படவேண்டிய தீய சக்திகள்
SENTHIL NATHAN - DELHI,இந்தியா
15-ஏப்-2019 17:04Report Abuse
SENTHIL NATHANபிரதமர் மோடி தமிழ் புத்தாண்டு வாழ்த்து வெளியிட்டுள்ளார். திராவிஷங்களுக்கு தமிழ் புத்தாண்டு வாழ்த்து தெரிவிக்க முடிய வில்லை. இவர்களுக்கு கொடி பிடிக்கும் ஹிந்துக்கள், தமிழர்கள் இவர்களை ஒதுக்கி வைக்க வேண்டும்.........
Bhaskar Srinivasan - Trichy,இந்தியா
15-ஏப்-2019 17:48Report Abuse
Bhaskar Srinivasanதிருடர்கள் முன்னேற்ற கட்சியின் ரஷ்யா சர்வாதிகாரி பெயர் கொண்ட __________ இன் தந்தை அதை தை 1 என்று மாற்றிவிட்டாராம் அதனால் திருடர்கள் முன்னேற்ற கட்சியின் வாழ்த்து சொல்ல மாட்டார்களாம் . நம் புத்தாண்டை மற்ற இவர்களுக்கு யார் அதிகாரம் தந்தது என் தந்தை பட்டன் முப்பாட்டன் பரண் என 7 தலைமுறைகளை கொண்டாடி வழிபாட்டுவந்ததை மற்ற இவர்களுக்கு என்ன அதிகாரம்...
palani kuppuswamy - sanjose,யூ.எஸ்.ஏ
16-ஏப்-2019 10:15Report Abuse
palani kuppuswamyஎந்த கேவலமான பிறவிகளின் புத்தாண்டு வாழ்த்து யாருக்கு வேணும். வாழ்த்து சொல்லவும் தகுதி வேணும் .எவர்கள் நம் தொன்று தொட்டு வரும் மத நம்பிக்கைகளை கேலி பேசி திரிபவர்கள் வெட்கம் கேட்ட பிறவிகள் . பொது மக்களின் பணத்தில் வாழ்பவர்கள் ஒழுக்கம் கேட்டா பிறவிகள் இவர்களை பொருட் படுத்தாமல் புறம் தள்ள வேண்டும்...
oce - chennai,இந்தியா
15-ஏப்-2019 14:57 Report Abuse
oce இந்த தலைப்பின் கார்ட்டூனை ஒவ்வொரு வாக்கு சாவடியின் முகப்பிலும் வைக்க வேண்டும். எவனும் திமுகவுக்கு ஓட்டு போடமாட்டான்.
oce - chennai,இந்தியா
15-ஏப்-2019 14:40 Report Abuse
oce கலைஞர் பயன்படுத்திய துணிமணிகள் கரை வேட்டிகள் கறுப்பு கண்ணாடிகள் ஆகியவற்றை மூட்டை கட்டி பெட்டியில் அடைத்து காசிக்கு சென்று கங்கையில் தள்ளிவிட்டவர்கள் இந்துக்களை கேலி செய்வதை இந்துக்கள் தேர்தலில் முடிவு கட்டவேண்டும்.
மேலும் 208 கருத்துக்கள்...
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)