மோடி வெல்ல முடியாதவர் அல்ல: சோனியா

ரேபரேலி: பிரதமர் மோடி வெல்ல முடியாதவர் அல்ல என ரேபரேலி தொகுதியில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்த பின்னர் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா கூறினார்.

பேரணிஉ.பி.,யின் ரேபரேலி தொகுதியில் 5வது முறையாக போட்டியிடும் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா, இன்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். அவருடன் காங்கிரஸ் தலைவர் ராகுல், கிழக்கு பகுதி பொது செயலர் பிரியங்கா உடன் சென்றனர்.வேட்புமனு தாக்கலுக்கு முன்னர், காங்கிரஸ் நிர்வாகி ஒருவர் ஏற்பாடு செய்த பூஜையில் சோனியா, ராகுல், பிரியங்கா ஆகியோர் கலந்து கொண்டனர். பின்னர், அங்கிருந்து பேரணியாக சென்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். இந்த பேரணியில் ஏராளமான காங்கிரஸ் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
மே 6 ம் தேதி இங்கு தேர்தல் நடக்க உள்ளது. சோனியாவை எதிர்த்து பா.ஜ., சார்பில், காங்கிரசிலிருந்து விலகிய தினேஷ் பிரதாப் சிங் போட்டியிடுகிறார். பகுஜன் சமாஜ் , சமாஜ்வாதி கூட்டணி வேட்பாளரை நிறுத்தவில்லை.

எதுவும் செய்யவில்லைபின்னர் ராகுல் கூறுகையில், இந்தியாவில் பலர், தாங்கள் நாட்டை விட பெரியவர்கள். வெல்ல முடியாதவர்கள் என கருதிய சிலர் இருந்தனர். கடந்த 5 ஆண்டில், நாட்டு மக்களுக்கு மோடி எதையும் செய்யவில்லை. ஊழல் குறித்து பிரதமர் மோடி என்னுடன் விவாதிக்க தயாராக உள்ளாரா என்றார்.

nsmimg683347nsmimg

சவால்காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா கூறுகையில், ரேபரேலியில் வெற்றி பெறுவேன். பிரதமர் மோடிக்கு மக்கள் பதில் அளிப்பார்கள். மோடி வெல்ல முடியாதவர் அல்ல. 2004 தேர்தலை மறக்க வேண்டாம். வாஜ்பாய் வெல்ல முடியாதவராக இருந்தார். ஆனால், நாங்கள் வெற்றி பெற்றோம். இவ்வாறு அவர் கூறினார்.வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)