வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லையா?

புதுடில்லி : நடப்பு லோக்சபா தேர்தலில் நாடு முழுவதும் 100 சதவீதம் ஓட்டுப்பதிவை உறுதி செய்ய தேர்தல் கமிஷன் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.


வாக்காளர்களுக்கு உதவும் வகையிலான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. வாக்காளர் பட்டியலில் பெயர் விடுபட்டிருந்தாலும் மக்கள் தங்களின் ஓட்டை பதிவு செய்ய முடிவும்.
இதற்கு செய்ய வேண்டியவை :

* வாக்காளர் பட்டியலில் உங்களின் பெயர் விடுபட்டிருந்தால் கீழ்வரும் நடைமுறைகளை பின்பற்றி உங்களின் ஓட்டை பதிவு செய்யலாம்.

* ஆன்லைன், ஆப்லைன் என இரு வழிகளில் செய்யலாம்.

* இந்திய தேர்தல் கமிஷனின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://eci.gov.in/ க்குள் செல்ல வேண்டும்.

* ஆன்லைன் வேட்பாளர் பதிவு என்பதை கிளிக் செய்யவும்
* உங்களுக்கான username மற்றும் password ஐ உருவாக்கி sign up செய்ய வேண்டும்.


* உங்களின் புகைப்படம் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட முகவரி சான்றை பதிவேற்றம் (upload) செய்து, உங்களின் ஓட்டுச்சாவடிக்கு சென்று உங்களின் வாக்கை செலுத்தலாம்.


* புகைப்படம் மற்றும் முகவரி சான்றை பதிவேற்றுவதில் ஏதேனும் சிக்கல் ஏற்பட்டால், உரிய ஆவணங்களுடன் ஓட்டுச்சாவடி அதிகாரியை அணுகி, ஓட்டினை செலுத்தலாம்.வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)