பா.ஜ., தேர்தல்அறிக்கை : அழகிரி கருத்து

காரைக்குடி : ''வெள்ளை பேப்பரில், கறுப்பு மையில் எழுதப்பட்ட துணிக்கடை விளம்பரம்,'' என, பா.ஜ., தேர்தல் அறிக்கை குறித்து, காங்., மாநிலத் தலைவர், அழகிரி கருத்து தெரிவித்தார். காரைக்குடியில் நேற்று அவர் அளித்த பேட்டி:சிவகங்கை லோக்சபா தொகுதி, இந்தியாவே உற்று நோக்கக்கூடிய தொகுதி. இந்தத் தேர்தலின் கதாநாயகன், காங்கிரஸ் தேர்தல் அறிக்கை தான்.தேர்தல் ஆணைய அதிகாரிகளும், தமிழக அரசு அதிகாரிகளும், தங்கள் நம்பகத்தன்மையை இழந்து வருகின்றனர்.
மதசார்பற்ற கூட்டணி, தமிழகத்தில் தான் வலிமையாக உள்ளது. மக்கள் மன்றத்தின் மூலமாக, ஆட்சி மாற்றம் கொண்டு வருவர்.வெற்று வெள்ளை பேப்பரில், கருப்பு மையில் எழுதப்பட்ட துணிக்கடை விளம்பரம் தான், பா.ஜ.,வின் தேர்தல் அறிக்கை. ராகுல், 12ம் தேதி, தமிழகத்தில், கிருஷ்ணகிரி, திருப்பரங்குன்றம், தேனி, சேலத்தில் பிரசாரம் மேற்கொள்கிறார்.இவ்வாறு, அவர் கூறினார்.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)