பிரசாரம் யாருக்காக?

கோல்கட்டா: மேற்கு வங்கத்தில், சமீபத்தில், பிரதமர், நரேந்திர மோடி பிரசாரம் செய்தார். அப்போது, முதல்வர் மம்தா பானர்ஜியை விமர்சித்து பேசினார். இந்த மாநிலம் வளர்ச்சி பெறாமல் தடுக்கும் சக்தி, ஆட்சியில் அமர்ந்துள்ளது. மாநில வளர்ச்சிக்கு தடை போடும் மம்தா, 'ஸ்பீடு பிரேக்கர் முதல்வர்' என, நரேந்திர மோடி விமர்சித்தார்.



திரிணமுல், காங்., தலைவரும், மேற்கு வங்க முதல்வருமான, மம்தா பானர்ஜி, தன் பிரசார கூட்டங்களில், மோடியை மிக கடுமையாக விமர்சிக்கிறார்.'நாட்டின் ஜனநாயகத்துக்கு அச்சுறுத்தலாக உள்ளார். அவர் நீக்கப்பட வேண்டும்' என, மோடி குறித்து, மம்தா பேசினார்.'நாட்டைக் காப்பாற்ற, 42 தொகுதிகளில் வெற்றி பெறுபவர் பிரதமர் ஆக வேண்டும்' என, தன் பிரதமர் ஆசையையும், மம்தா மீண்டும் உறுதி செய்தார்.

இருவரும் பரஸ்பரம் புதிய பட்டப் பெயர்களை வைத்துள்ளனர். ஆனால், இவர்கள் பிரசாரம் செய்த, ஆலிபுர்த்வார், கூச் பெஹர் போன்றவை, மாநிலத்தில் மிகவும் பின்தங்கிய பகுதிகள்.இந்த மக்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து, இருவரும் பேசவில்லை; வசை மட்டும் பாடினர்.தங்கள் கட்சியின் வெற்றி மற்றும் பிரதமர் பதவியை குறிவைத்தே, இவர்கள் பிரசாரம் அமைந்துள்ளதாக, மக்கள் விமர்சிக்கின்றனர்.

- சாந்தனு பானர்ஜி -
சிறப்பு செய்தியாளர்



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)