ஊரார் பிள்ளையை ஊட்டி வளர்த்த ராஜ்நாத் சிங்

தமிழகத்தில், அ.தி.மு.க., கூட்டணியில், துாத்துக்குடி, கன்னியாகுமரி, சிவகங்கை, கோவை, ராமநாதபுரம் லோக்சபா தொகுதிகளில், பா.ஜ., போட்டியிடுகிறது. தலைவர் அந்தஸ்தில் உள்ளவர்களே, வேட்பாளராக போட்டியிடுகின்றனர். தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து தங்கள் கட்சிக்கும், கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கும் பிரசாரம் செய்ய, 'ஸ்டார்' தலைவர்கள் இல்லை.தேசியத் தலைவர் அமித் ஷா, துாத்துக்குடி, சிவகங்கையில் பிரசாரம் செய்தார். இவரை தொடர்ந்து, மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பிரசாரத்திற்கு வந்தார். சிறப்பு விமானம், ஹெலிகாப்டர் என, அசத்தலாக வந்த அவர், பிரசாரம் செய்தது என்னவோ, அ.தி.மு.க., வேட்பாளர்களுக்கு மட்டும் தான். இதை, அவரது கட்சியினரே எதிர்பார்க்கவில்லை.ஏப்., 7 ல், சிறப்பு விமானம்மூலம் திருச்சி வந்தவர், ஹெலிகாப்டரில் பெரம்பலுார் சென்று, அ.தி.மு.க., வேட்பாளர் சிவபதியை ஆதரித்து பிரசாரம் செய்தார். தொடர்ந்து மதுரை வந்தவர், அ.தி.மு.க., வேட்பாளர் ராஜ்சத்யனை ஆதரித்து பிரசாரம் செய்து விட்டு, உடனடியாக டில்லி புறப்பட்டு சென்றார்.வழக்கமாக, தேசிய தலைவர்கள் வரும் போது, பாதுகாப்பு கருதி, ஒவ்வொரு இடத்திற்கும் செல்ல முடியாது என்பதால், மதுரை போன்ற முக்கிய நகரங்களில் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்து, அங்கு சுற்றியுள்ள கூட்டணி கட்சி வேட்பாளர்களை வரவழைத்து பிரசாரம் செய்வது வழக்கம். ஜெயலலிதா முதல்வராகஇருந்தபோது, இந்த முறையில் தான் பிரசாரம் செய்தார்.ஆனால், ராஜ்நாத்சிங்கோ, பா.ஜ., வேட்பாளர்கள் போட்டியிடும், எந்த தொகுதிகளுக்கும் செல்லவில்லை. 'ஊரார் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன் குழந்தை தானாக வளரும்' என, நினைத்தாரோ என்னவோ!வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)