தேவகவுடா பிரதமராக மாட்டார்: குமாரசாமி

மங்களூரு : லோக்சபா தேர்தலில் மெகா கூட்டணி வெற்றி பெற்று, ஆட்சிக்கு வந்தால் தனது தந்தையும், மதசார்பற்ற ஜனதா தள கட்சி தலைவருமான தேவகவுடா பிரதமராக மாட்டார் என கர்நாடக முதல்வர் குமாரசாமி தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்களிடம் பேசிய குமாரசாமி, மெகா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் தேவகவுடா பிரதமராக மாட்டார். அரசிற்கு ஆலோசனை வழங்குபவராக மட்டுமே இருப்பார். நாட்டின் நலனுக்காக கவனம் செலுத்தப்படும். தற்போது வெற்றி பெறுவது ஒன்று மட்டுமே இலக்கு. பிரதமர் யார் என்ற கேள்வி இரண்டாம்பட்சம் தான் என்றார்.
முன்னதாக பிப்.,27 ம் தேதி மாண்டியாவில் பிரசார கூட்டத்தில் பேசிய குமாரசாமி, 1996 ம் ஆண்டு கர்நாடக மக்கள் எங்களுக்கு 16 லோக்சபா இடங்களை கொடுத்ததால் அவர்களின் ஆசியுடன் கன்னடரான தேவகவுடா பிரதமர் ஆனார். காங் - மஜத கூட்டணிக்கு மீண்டும் கர்நாடகாவில் குறைந்தபட்சம் 20 முதல் 22 இடங்களை மக்கள் அளித்தால் கன்னடர் ஒருவர் பிரதமர் பதவிக்கு வர முடியும் என கூறி இருந்தது குறிப்பிடத்தக்கது.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)