உதயசூரியனில் போட்டி: திருமாவளவன் விளக்கம்

திண்டிவனம்:''வெற்றி வாய்ப்பை இழந்து விடக் கூடாது என்ற காரணத்தால் தான், உதயசூரியன் சின்னத்தில், விழுப்புரத்தில் போட்டியிடுகிறோம்,'' என, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர், திருமாவளவன்பேசினார்.

விழுப்புரம் லோக்சபா தொகுதியில், வி.சி., வேட்பாளர் ரவிக்குமாரை ஆதரித்து, திண்டிவனம் வண்டிமேடு, வ.உ.சி., திடலில் நேற்று பொதுக்கூட்டம் நடந்தது. இதில், அவர் பேசியதாவது:விழுப்புரம் தொகுதி வேட்பாளர், நாடறிந்த எழுத்தாளர். தி.மு.க., தலைமையிலான கூட்டணி, பரிசுத்தமான கூட்டணி. நம்மை எதிர்க்கும் கூட்டணி, சீட்டும் நோட்டும் பேரம் பேசி, உருவாக்கப்பட்ட கூட்டணி.

பா.ஜ.,வின் கிளை அமைப்பாக, அ.தி.மு.க., இயங்கி வருகிறது. வெற்றி வாய்ப்பை இழந்து விடக்கூடாது என்ற காரணத்தால் தான், உதயசூரியன் சின்னத்தில், விழுப்புரத்தில் போட்டியிடுகிறோம். தி.மு.க.,விற்கும், எங்களுக்கும் உள்ள உறவு, தேர்தலுக்கு மட்டுமல்ல; கொள்கை ரீதியானது.

'ஓட்டுச்சாவடிகளை கைப்பற்றுங்கள்' எனக் கூறும் தலைவரை பார்த்து கொண்டு இருக்கிறீர்கள். ஓட்டுச் சாவடிகளை கைப்பற்றினால், தி.மு.க.,வினர் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க மாட்டார்கள். 100 கோடி ரூபாய் கொடுத்தால் கூட, ஓர் ஓட்டிற்கு ஈடாகாது.ஊழல் செய்து கொள்ளையடித்த பணத்தை கொடுத்தால், வாங்கி கொள்ளுங்கள். ஸ்டாலினின் நோக்கம், ரவிக்குமாரை வெற்றி பெற வைப்பதல்ல; ராகுலை பிரதமராக்குவதே.இவ்வாறு அவர்பேசினார்.

விக்கிரவாண்டியில், திருமாவளவன் பேசுகையில், ''விடுதலை சிறுத்தைகள் கட்சி, மோடியை எதிர்க்கிறது என்றால், ஹிந்துக்களுக்கு எதிரி எனவும், தி.மு.க., கூட்டணியே ஹிந்துக்களுக்கு எதிரி என்ற பொய் பிரசாரத்தை செய்கின்றனர்.தி.மு.க., கூட்டணி, ஜாதி வெறியர்களுக்கு, மத வெறியர்களுக்கு, ஊழல் சக்திகளுக்கு எதிரான கூட்டணி; என்றைக்கும் ஹிந்துக்களுக்கு எதிரான கூட்டணி இல்லை,'' என்றார்.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)