ஈரோட்டில் தேரோட்ட போவது யார்?

ஈரோடு லோக்சபா தொகுதியில், ஈரோடு கிழக்கு, மேற்கு, மொடக்குறிச்சி, திருப்பூர் மாவட்டம் காங்கேயம், தாராபுரம், நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் என, ஆறு தொகுதிகள் வருகின்றன.

இதில், தாராபுரம், காங்., வசமும், காங்கேயத்தில் கொங்குநாடு மக்கள் பேரவை, தனியரசும், எம்.எல்.ஏ.,வாக உள்ளனர். மற்ற தொகுதிகள், அ.தி.மு.க., வசம் உள்ளன.ஓட்டுகள் பிரிப்புஈரோடு லோக்சபா தொகுதியில், கட்சி மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் என, 20 பேர் களத்தில் உள்ளனர்.

இதில், புதியவர், இளைஞர் என்ற ரீதியில், அதிக உழைப்பு இருந்தும், மக்கள் நீதி மையம் வேட்பாளர் சரவணகுமார், நான்காம் இடத்துக்கு செல்கிறார்.அ.தி.மு.க.,வில் இருந்து பிரிந்தவர்கள் மற்றும் அவர்களை சார்ந்தவர்கள் என்ற ரீதியில், அ.ம.மு.க., வேட்பாளர் செந்தில்குமார், மூன்றாமிடத்தில் உள்ளார்.

தினகரன் வருகையால், சற்று செலவுகளை தாராளமாக செய்வதால், மூன்றாமிடத்தில் சற்று கூடுதல் ஓட்டுகளை பிரிக்கும் நிலை உள்ளது.அ.தி.மு.க.,வில், காங்கேயம் நகர செயலர், வெங்கு மணிமாறன் நிற்கிறார். இவர், ஈரோடு, நாமக்கல் மாவட்ட தொகுதிகளில், அறிமுகம் இல்லாதவர் என்பது பெரும் குறை.

தற்போதைய, எம்.பி., செல்வகுமார சின்னையன், இத்தொகுதிகளுக்கு குறிப்பிடும்படியாக, எந்த பணியும் செய்யவில்லை என்பதால், அதைச் சொல்லி, ஓட்டு கேட்க முடியவில்லை.அதுபோல, மொடக்குறிச்சி, தாராபுரம், காங்கேயம் நகரம் தவிர மற்ற பகுதிகளில், ம்.எல்.ஏ.,க்கள் உட்பட, நிர்வாகிகளின் ஒத்துழைப்பு குறைவாக உள்ளது.

குமாரபாளையத்தில், மின் துறை அமைச்சர் தங்கமணியால், அத்தொகுதி, அ.தி.மு.க.,வுக்கு சற்று பலம் சேர்கிறது. ஆனால், ஈரோடு கிழக்கு, மேற்கு தொகுதிகளின், எம்.எல்.ஏ.,க்கள் தென்னரசு, கே.வி.ராமலிங்கம் ஆகியோர், தங்களது குடும்பத்தார், ஆதரவாளர்களுக்கு மட்டுமே, பதவிகளை தாரை வார்த்ததால், உண்மையான தொண்டர்கள், பதவியை பறி கொடுத்தவர்களின் ஒத்துழைப்பு குறைவாகவே உள்ளது.

ஒத்தழைப்பு குறைவு

மேலும், ஜெ., போன்ற மிரட்டி ஒருங்கிணைக்கும் தலைமை இல்லாததால், இரண்டாம் இடத்துக்கு, வெங்கு மணிமாறன் வேகமாக பின்னேறுகிறார். ம.தி.மு.க., வேட்பாளராக அறிவிக்கப்பட்டு, தி.மு.க., உறுப்பினராக, உதய சூரியனில் போட்டியிடும் கணேசமூர்த்தி, சின்னம் அறிவிப்புக்கு பின் சுறுசுறுப்பு அடைந்து உள்ளார்.

ம.தி.மு.க.,வினரே, இதை விரும்பவில்லை. இருப்பினும், கட்சிக்கு கட்டுப்பட்டு, வேலை செய்கின்றனர்.அதேநேரம், தி.மு.க., - காங்., - கம்யூ., - கொ.ம.தே.க.,வுக்கு தனித்தனி ஓட்டு வங்கி உள்ளதால், ஓட்டு சேகரிப்பை தீவிரப்படுத்தி உள்ளனர். ஆயினும், காங்கேயம், குமாரபாளையம் ஆகிய இடங்களில், ஒத்துழைப்பு குறைவாக உள்ளது. இருப்பினும், வைகோ, ஸ்டாலின் என, தொடர்ச்சியாக தலைவர்கள் வருகையால், தற்போதைய நிலையில், கணேசமூர்த்தி, முதல் இடத்துக்கு முந்துகிறார்.

அ.தி.மு.க., மற்றும் தி.மு.க.,வினர் என்னதான் உழைத்தாலும், கடந்த முறை, இத்தொகுதியில், தனித்து நின்ற, அ.தி.மு.க., 2 லட்சத்துக்கும் மேற்பட்ட ஓட்டுகள் வித்தியாசத்தில், வெற்றி பெற்றது. இம்முறை, வெற்றி வாய்ப்பு, குறைந்த ஓட்டு வித்தியாசத்திலேயே இருக்கும்.வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)