சவுதாலா குடும்பத்தில் சண்டை கட்சிக்காக உறவில் ஓட்டை

ஹரியானா முன்னாள் முதல்வர், ஓம் பிரகாஷ் சவுதாலாவின் குடும்பத்தில் நடந்த சண்டையின் உச்ச கட்டமாக, நெருங்கிய, சகோதரிகள் மோதலில் ஈடுபட்டுள்ளனர்.

ஹரியானா மாநில முதல்வராக, இந்திய தேசிய லோக் தளம் கட்சி தலைவர், ஓம் பிரகாஷ் சவுதாலா, 1999 முதல், 2005 வரை இருந்தார். அவரது ஆட்சியின் போது, 3,206 இளநிலை ஆசிரியர்களை, பள்ளிகளுக்கு நியமித்ததில் ஊழல் நடந்தது.

சவுதாலா மற்றும் அவரது மூத்த மகன், அஜய்க்கு, 10 ஆண்டு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 84 வயதாகும், ஓம் பிரகாஷ் சவுதாலாவும், அவரது மகனும், சிறையில் தண்டனை அனுபவித்து வருகின்றனர்; கட்சி பொறுப்பை இளைய மகன், அபய் சவுதாலா ஏற்று உள்ளார்.இதனால், அஜய் சவுதாலாவின் குடும்பத்திற்கு அதிகாரம் குறைக்கப்பட்டது. அதிருப்தி அடைந்த அஜய்யின் மனைவியும், எம்.எல்.ஏ.,வுமான நைனா சவுதாலா, அவரது மகன்கள், துஷ்யந்த் மற்றும் திக் விஜய் ஆகியோர், 'ஜனநாயக ஜனதா கட்சி' என்ற புதிய கட்சி துவக்கினர்.

இந்த கட்சியை பிரபலப்படுத்த, நைனா சவுதாலா, பெண்களை திரட்டி, பேரணி நடத்துகிறார். இதற்கு போட்டியாக, அபய் சவுதாலா குடும்பத்தில் இருந்து, அவரது ஒன்று விட்ட சகோதரரின் மனைவி, சுனைனா சவுதாலாவை களம் இறக்கியுள்ளனர்.

ஆங்கில இலக்கியம் படித்த சுனைனா, சகோதரி முறையுள்ள, நைனா சவுதாலாவை எதிர்த்து, பெண்களை திரட்டி வருகிறார். இரண்டு சகோதர உறவுகளின் தேர்தல் பிரசாரமும், ஒருவரையொருவர் தாக்குவதாக உள்ளதால், ஹரியானா அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.மேலும், இந்த அரசியல் யுத்தத்தில், குடும்ப உறவுகளுக்கும் பிரிவினைகள் ஏற்பட்டு உள்ளன; இதை, மற்ற கட்சிகள் ஆர்வத்துடன் பார்த்து வருகின்றன.

- நமது நிருபர் -வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)