பா.ஜ., தோற்கும்: மாயா உறுதி

சகரன்புர்: பா.ஜ.,வின் வெறுக்கத்தக்க வகையிலான கொள்கைகளால் அந்த கட்சி இந்த தேர்தலில் நிச்சயமாக தோற்கும் என பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி தெரிவித்துள்ளார். உ.பி.,யில் லோக்சபா தேர்தலுக்காக கூட்டணி அமைத்திருக்கும் சமாஜ்வாதியும், பகுஜன் சமாஜ் கட்சியும் இணைந்து இன்று முதல் முறையாக தேர்தல் பிரசாரம் செய்தன. இந்த பிரசார பொதுக் கூட்டத்தில் பேசிய மாயாவதி, காங் மற்றும் பா.ஜ.,வை கடுமையாக விமர்சித்து பேசினார்.கூட்டத்தில் பேசிய மாயாவதி, பா.ஜ.,வின் வெறுக்கத்தக்க வகையிலான கொள்கைகளால் அக்கட்சி இந்த தேர்தலில் தோல்வியடையும். குறிப்பாக காவலாளி பிரசாரம். எத்தனை சிறிய மற்றும் பெரியவர்கள் காவலாளியாக முயற்சித்தார்கள் என்பது முக்கியமல்ல. பா.ஜ.,வால் வெற்றி பெறவே முடியாது. பல ஆண்டுகளாக ஆட்சி செய்தும் ஒன்றும் செய்யாமல் தோல்வி அடைந்த கட்சி, காங். ஆனால் நாங்கள் ஆட்சியில் இருந்த போது குறைந்தபட்ச வருமான வாக்குறுதிக்கு பதிலாக ஏழைகளுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தி தந்தோம். இந்திரா கூட வறுமையை போக்க 20 அம்ச திட்டங்களை தான் வகுத்தார். ஆனால் அது செயல்பாட்டிற்கு வந்ததா?நாங்கள் மற்ற கட்சிகளை போல் இல்லாமல் சொல்லாமல் வேலை செய்பவர்கள். பெரிய பெரிய வாக்குறுதிகள் அளித்தும் காங்., எதையும் நிறைவேற்றவில்லை. பல மாநிலங்களில் இருந்து அக்கட்சி வெளியேற்றப்பட்டுள்ளது. வறுமையை ஒழிக்க நியாய் திட்டம் சரியான தீர்வு அல்ல.
காங் அரசு போபர்ஸ் ஊழலில் சிக்கியது. பா.ஜ., அரசு ரபேல் ஊழலில் சிக்கி உள்ளது. பா.ஜ., அரசு அனைத்து அரசு இயந்திரங்களையும் தவறாக பயன்படுத்துகிறது. அவர்களுக்கு மற்றொரு வாய்ப்பு தராதீர்கள். அனைத்து மட்டங்களிலும் ஊழல் அதிகரித்துள்ளது. காங் - பா.ஜ.,விற்கு ஏற்கனவே போதிய வாய்ப்புக்கள் கொடுத்தும் அவை ஒன்றும் செய்யவில்லை. அவர்களுக்கு ஓட்டளித்தால் விவசாயிகள் கடனில் இருந்து மீளவே முடியாது என்றார்.வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)